மூலிகை மர்மம் - நாயுருவி
நாயுருவி வசியம்
செந்நாயுருவி செடியை சாபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து 45 நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வசிகரமாகும் பின் அனைத்து வேர்களையும் எடுத்து சுட்டு கரியாக்கி அதை திலகமாக இட்டால் வசியம் உண்டகும் மேலும் இப்படி செய்தால் உடலில் அதிக உஷ்ணம் ஆகும் அதை தவிர்க்க பசும் பால் அருந்த வேண்டும். காப்பி, டீ, புகை, புலால் கூடாது. இது முக்கியம்
++++++++++++++++++++++++++++++++++++
1. அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் ( 4.30 மணி முதல் 6 மணி வரை ) குளித்து வீட்டில் விளக்கேற்றி தீப ஜோதி தரிசனத்தை பார்த்து வருகிறானோ அவனுடைய பாவங்கள் விரைவில் நீங்கும்.
2. தினமும் பசுவுக்கு அகத்தி கீரையை உணவாக கொடுத்து வாருகிறார்களோ அவர்களுடைய பாவங்களும் விரைவில் நீங்கும். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அடக்கம்.
3. யாரொருவர் தொடர்ந்து அன்ன தானம் செய்து வருகிறார்களோ அவர்களின் பாவங்களும் விரைவில் தீரும்.
4. எத்துணை பெரிய தனவந்தராக இருந்தாலும் இறைவன் அதனை பெரிதாக எண்ணுவதில்லை, மாறாக நீங்கள் இறைவனுக்காக என்ன உடல் உழைப்பை செய்தீர்கள் என்றே இறைவன் பார்க்கிறார். இறை ஸ்தலங்களில் நீங்கள் உடல் உழைப்பால் செய்யும் பணிகளால் உங்கள் பாவங்கள் விரைவில் நீங்கும்.
5. நீங்கள் பிறந்த நட்சத்திர நாளன்று உங்களுக்கு உண்டான நட்சத்திர விருட்சத்திற்கு முன் விளக்கேற்றி நட்சத்திர காயத்திரி மந்திரம், அதி தேவதை பிரத்யதி தேவதை மந்திரம் சொல்லி வணங்கி விருட்சத்தினை சுற்றி வந்து வழிபட்டு, பின் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்களையும் வலம் வந்து வழிபட சகல தோஷங்களும் நீங்கும்.
6. நவ தானியங்களை பரிகாரம் செய்யும் நாளுக்கு முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் நவ தானியம் ஊறவைத்த தண்ணீரை விருட்சங்களுக்கு ஊற்றி, ஊறவைத்த நவதானியதுடன் வெல்லம் சேர்த்து ஆட்டி அதனை பசு மாட்டிற்கு உண்ண கொடுத்து பசு உண்ணும் போது பசுவை 9 முறை வலம் வந்து வணங்க தோஷங்கள் நீங்கும்.
7. ஆலய திருப்பணிகளில் நம்மால் இயன்ற பொருள் உதவிகளை செய்து வர எல்லா வகையான பாவங்களும் நீங்கும்.
மேற்கண்ட பரிகாரங்களை தொடர்ந்து செய்துவர நம்மை வாட்டும் துன்பங்கள் நீங்கி வாழ்வில் புது வசந்தம் உண்டாகும், இன்பம் பெருகும், நல்லவைகள் நடக்கும், தொழில் வளமும் செல்வ வளமும் பெருகும்.
அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி நின்று இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.
ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை அன்று இதைத் துவங்கவும்.
மந்திரம் :-
நமக்காக ஜெபிக்கும் போது
ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா||
பிறருக்காக ஜெபிக்கும் போது
ஓம் நமோ பகவதே பாஸ்கராய .................... சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா||
( ................ என்ற இடத்தில் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவருடைய அல்லது அந்த குடும்பத்தின் பெயர் )
யந்திரம் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++
நாம் எப்பொழுதும் முடி வெட்டுதல், சவரம் செய்தல் மற்றும் நகம் வெட்டுதல் போன்ற காரியங்களை நாள், நட்சத்திம், திதி பார்க்காமல் நம்முடைய சௌகர்யத்திற்கு செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் நமக்கு தீமையான விளைவுகளே ஏற்ப்படும்.
இதற்குண்டான வழிமுறைகளை “ஸ்ரீ குண்டலினி மஹரிஷி” அளித்துள்ளார்.
பரணி,கிருத்திகை,திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம்,கேட்டை, மூலம், பூராடம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் தலைமுடி, நகம் வெட்டுதல், சவரம் செய்தல் கூடாது.
நாட்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் அவரவர் ராசிக்கு உண்டான சூன்ய திதி நாட்களிலும், ஆடி,புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி மாதங்களில் மேற்கண்ட காரியங்களை செய்யக் கூடாது.
ஸ்ரீ குண்டலினி மஹரிஷி அருளிய விதிமுறைகளை நாம் கடைபிடித்தால் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து எளிதாக நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.
ஆனால் நாம் இறைவனுக்கு பிரார்தனைக்காக முடியை காணிக்கையாக செலுத்தும் பொழுது மேற்கூறிய கட்டுப்பாடுகள் கிடையாது.
முடிவெட்டுவதையும், எண்ணெய் ஸ்நானத்தையும் ஒரே நாளில் செய்யக்கூடாது வீட்டிலேயே சவரம் செய்தாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு தான். அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும், செவ்வாய், சனிக்கிழமைகளிலும் முடி வெட்டுதல், சவரம் செய்தலைத் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் பிறந்த கிழமை, பிறந்த திதி, பிறந்த நட்சத்திரம் வரும் நாள் கற்பு நாள் எனப்படும். அந்த நாளில்
செய்ய கூடியவைகள் :
1. பூமி வாங்க.
2. புதிய வீடு குடி புகுதல்.
3. விருந்து உண்ணல்.
4. ஆடை ஆபரணம் வாங்குதல்.
5. கல்வி ஞானம் பெற.
6. தோட்டம் அமைத்தல்
செய்யக்கூடாதவைகள் :
1. எண்ணெய் ஸ்நானம்
2. திருமணம் செய்வது.
3. முடி வெட்டுதல்.
4. நோய்க்கு வைத்தியம்.
5. தூரதேசப் பிரயாணம்.
+++++++++++++++++++++++++++++++
உணவு உண்ணும்போது பின்பற்றும் விதிமுறைகள் *
உணவு உண்ணும்போது சில வித விதிகளை பின்பற்றினால்தான்
நாம் அருந்திய உணவு நமக்கு பலன்தரும் என்று பெரியோர்கள் வழிவகுத்துள்ளனர்.......
கிழக்குமுகமாக அமர்ந்து உணவு உண்ணும்போது
- நிலைத்த செல்வம் உண்டாகும்.
மேற்குமுகமாக அமர்ந்து உணவு உண்ணும்போது
- புகழ் உண்டாகும்.
தெற்குமுகமாக அமர்ந்து உணவு உண்ணும்போது
- நீடித்த ஆயுள் உண்டாகும்.
வடக்குமுகமாக அமர்ந்து உணவு உண்ணும்போது
- வறுமை ஓடிவரும்.
ஆக வடக்குமுகமாக அமர்ந்து உணவு அருந்துவதை தவிர்க்கவும்
நகத்தை பற்களால் கடிக்க கூடாது.
மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.
தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.
நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.
அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.
ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.
இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.
உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.
ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.
நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.
உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.
கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.
பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.
தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.
++++++++++++++++++++++++++++++++
தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.
தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.
மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
Super news
ReplyDelete