விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்
ஒலிக்கு மகிமை உண்டா?
ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டா? ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவையா?
மனித உடல், மனம் ஏன் ஆன்மாவுக்கே நலம் அளிக்க வல்லவை மந்திரங்கள் என்று ஹிந்து மதம் கூறுகிறது. மந்திரங்களின் மகத்துவத்தை விஞ்ஞானபூர்வமாக அறிய விழையும் ஆர்வம் 1787ம் ஆண்டே துவங்கி விட்டது என்றால் வியப்பாக இல்லை?
க்ளாட்னி ப்ளேட்ஸ்
ஜெர்மானியரான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (தோற்றம் 30-11-1756 மறைவு 3-4-1827) ஒரு சிறந்த இசை வல்லுநர். அவர் ஒரு சிறந்த இயற்பியல் விஞ்ஞானியும் கூட. 1787ம் ஆண்டு அவர் தனது கண்டுபிடிப்புகளை ‘இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' என்ற நூலில் எழுதி வெளியிட உலகமே பரபரப்புக்குள்ள
ானது! இவரது பிறப்பிலும் இறப்பிலும் கூட இசை ஒரு தற்செயல் ஒற்றுமையை ஏற்படுத்தி இருப்பதும் ஒரு அதிசயம்தான்! பிரபல இசை மேதை மொஜார்ட் பிறந்த அதே ஆண்டுதான் இவர் பிறந்தார்.
பிரபல இசை மேதை பீத்தோவன் மறைந்த அதே ஆண்டுதான் இவர் மறைந்தார்!
க்ளாட்னிதான் ஒலியியல் (acoustics) என்ற புதிய இயலை வகுத்தார். ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை அவர் சோதனைகள் மூலம் நிரூபித்தார்! நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலின் வில்லை (bow) அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இவற்றை அவர் தொகுத்தார்.
கால்டினி ப்ளேட்ஸ் என்று இவை உலகப் புகழ் பெற்றன. உலகில் உள்ள ‘இயற்பியல் பொருளை' ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. அது பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்!
நெப்போலியன் அளிக்க முன் வந்த பரிசு
மாமன்னன் நெப்போலியனின் அரசவைக்கு க்ளாட்னி அழைக்கப்பட்டார். தனது சோதனைகளை மன்னர் முன் அவர் நிகழ்த்திக் காண்பித்தார்.
நெப்போலியன் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று அசந்து போனார். இப்படி ஒலி அலைகளால் மணல் துகள்களில் வெவ்வேறு வடிவங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறுபவர்களுக்கு 3000 ஃப்ராங்க் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். இந்தப் பரிசை 1816ல் சோபி ஜெர்மெய்ன் என்ற பெண்மணி பெற்றார்!
நெப்போலியன் க்ளாட்னிக்கு 6000 ப்ராங்க் கொடுத்து அவரைப் பாராட்டினார்.
காவராண்ட் ஆராய்ச்சி
இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர்.
வியன்னாவில் மார்ஷல்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த காவாராண்ட் என்ற எஞ்சினியருக்கு திடீரென ஒரு புதுத் தொல்லை ஏற்பட்டது. எப்போதெல்லாம் அவர் தனது வகுப்பறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு இயல்பான அமைதி போய் மனக்கலக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்பட்டது. அவரால் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணம் எதுவாக இருக்க முடியும் என்று அவர் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார்.
ஒரு நாள் சுவரில் சாய்ந்தவாறே யோசித்துக் கொண்டிருந்த போது சூட்சுமமான ஒலியின் அதிர்வுகளை உணர்ந்தார். அருகே உள்ள அறையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒரு ஏர்கண்டிஷன் இயந்திரம் 7 ஹெர்ட்ஸ் அளவில் நுண்ணிய ஒலியை ஏற்படுத்தியவாறே இயங்கிக் கொண்டிருந்தது. அதுவே அவரது நிம்மதியின்மைக்குக் காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் காவராண்ட் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சூட்சும ஒலி அலைகளை ஆராய ஆரம்பித்தார். காதால் நாம் சாதாரணமாகக் கேட்க முடியாத ஒலி அலைகள் மூலம் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு இன்ஃப்ரோசானிக இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார். அந்த இயந்திரம் ஏற்படுத்திய ஒலியைக் கேட்டவுடன் மிருகங்கள் துடிதுடித்து இறந்தன! மின்னல் ஒளியால் மனித உடல் கருகுவது போல, இந்த ஒலி அலைகள் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உடனடி மரணத்தை ஏற்படுத்தின!
சாதாரணமாக நாம் 20 ஹெர்ட்ஸுக்கும் கீழே உள்ள ஒலியையும் (இன்ஃப்ரோசானிக்) 20000 ஹெர்ட்ஸுக்கு மேலே உள்ள (அல்ட்ராசோனிக்) அலைகளையும் கேட்க முடியாது. ஆனால் இவற்றிற்கு வலிமை அதிகம்!
நாஸாவின் கண்டுபிடிப்பு
ஒலியியல் விஞ்ஞானம் வளரவே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதில் முன்னேற்றம் அடைந்து 20 டெசிபல் அளவிலான ஒலியை 14 மீட்டர் ஸ்டீல் ஹார்ன் மூலம் வெளிப்படுத்தினால் அந்த ஒலி கான்க்ரீட்டையே துளை போட்டு விடும் என்று கண்டுபிடித்து அறிவித்தது!
கலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும் ஏற்பட்டது.
மந்திரங்களைக் கண்ட மகரிஷிகள்
இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது ரிஷிகள் மிகவும் முன்னேறி அதன் சூட்சும ஆற்றலையும் அறிந்தனர். வானில் இருந்த சூட்சும ஒலிகளைக் கண்டதால் அவர்கள் மந்த்ர த்ருஷ்டா என அழைக்கப்பட்டனர்.
எந்த ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நேர்முகமாகக் கண்டதால் வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர்.
தவறானவர்கள் கையில் இது சேரக் கூடாது என்பதாலும் மந்திரங்களை பிரயோகிக்க குறிப்பிட்ட ஆன்மீக, உள, உடல் வலிமை தேவை என்பதாலும் அவர்கள் இதை குரு குல மு¨றையில் மட்டுமே கற்பித்தனர்.
மந்திரங்கள் பலிக்க அவர்கள் 1) உச்சரிப்பு 2) நியமும் கட்டுப்பாடும் 3) உபகரணம் 4) நம்பிக்கை ஆகிய நான்கையும் அடிப்படைத் தேவைகளாகக் குறிப்பிட்டனர்.
ஆனால் எதையும் ஆராய்ச்சி முறைக்கு உட்படுத்தும் நவீன விஞ்ஞானம் மந்திரங்களையும் புலனுக்கு உட்பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதால் அந்த புலன் அளவுக்கு உட்பட்ட பிரமிப்பூட்டும் உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.
காயத்ரி மந்திர மகிமை
அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார். வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது!
க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி. மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன.
ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.
ஸ்ரீ காயத்ரி மந்திரம்
' வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்'
என்று பகவத்கீதையில் கிருஷ்னபகவான் கூறுகிறார்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.
காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.
இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும்.
கீழ்கண்டவாறு ஐந்து இடங்களில் இதை நிறுத்தி சொல்லவேண்டும்.
காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.
இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.
மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:
யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்
நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.
மந்திரங்கள் வெறும் சந்தங்கள் தானா ?
நமது மந்திர ஒலி அதிர்வுகளுக்கு விசேஷ சக்தி உண்டா ?
அறிவியல் உண்மை
ஹான்ஸ் ஜென்னியின் ஆராய்ச்சி ஸ்விட்சர்லாந்துதேசத்தைச் சேர்ந்தவர்
டாக்டர் ஹான்ஸ் ஜென்னி (1904-1972). இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர்.
ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில்
ஈடுபட்டு 1967ம் ஆண்டு Cymatics: The Study of Wave Phenomena என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டார்.
பத்தாண்டு காலம் க்ளிசெரின்,
பாதரஸம், ஜெல், பவுடர்,இரும்பு போன்ற ஊடகங்களில் ஒலி அலைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்பதை முறையாக ஆராய்ந்து அவற்றைக் குறிப்பெடுத்தார்.
குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவ
ாக்குவதைக் கண்டு இவர்
அதிசயித்தார்.
ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்ட
போது சிக்கலான படங்கள் உருவாக ஆரம்பித்தன.
இதைத் தொடர்ந்து ஹிந்து மதம் சித்தரிக்கும் வெவ்வேறு மண்டலங்களை அதாவது யந்திரங்கள் மேல் இவர் கவனம்
திரும்பியது.
மந்திரங்களும் யந்திரங்களும்
__________
வேதங்கள் கூறும் மந்திரங்கள்
ஒவ்வொன்றிற்கும்
ஒரு சக்தி உண்டு.
இதே போல
ஒவ்வொரு யந்திரமும் ஒரு வித
ஜியாமெட்ரி உருவமாக
அமைக்கப்படுவதோடு குறிப்பிட்ட யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய
குறிப்பிட்ட மந்திரம் உச்சரிக்கப்பட்டு
சக்தி ஊட்டப்படுகிறது.
ஹான்ஸ் ஜென்னி குறிப்பிட்ட
மந்திரம் ஒன்றை உச்சரிக்கச்
செய்த போது குறிப்பிட்ட யந்திரத்தின் உருவம் வந்ததைப் பார்த்து பிரமித்துப்
போனார்.
ஓம் எனும் மந்திரமும் ஸ்ரீ யந்திர
அமைப்பும் தலையாய மந்திரமான ஓம்
என்பதை உச்சரிக்கச் செய்தார்.
ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன்
ஒரு முழு வட்டம் தோன்றியது.
ம்
என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ
யந்திரம் உருவானது.
நவீன உடலியல்
ரசாயன வல்லுநர்கள், வானியல்-இயற்பியல்
விஞ்ஞானிகள் மற்றும்
ஹிந்து யோகிகள் நம்முடைய உடல்கள் அணுத்துகள் அதிர்வுகளின்
அமைப்புகளே (system of vibrations) என்று ஒரு மனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
நம்முடைய உடலின்
ஒவ்வொரு அங்கமும்,
ஒவ்வொரு திசுவும், உறுப்பும்
வெவ்வேறு அதிர்வெண்களுக்
குத் தக்கபடி இயங்குகின்றன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தைக் கொண்டுள்ளது.
இதை சுருக்கமாக சொல்லப்
போனால் நம்முடைய உடலே உண்மையில் ஒலி அலைகளால்
உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆகிறது
எல்லாம் அதிர்வு மயம்
உடலே அதிர்வுகளின் கூட்டு என்னும் போது நம்மைச் சுற்றி உள்ள ஒலிகள்
நம்மைப் பாதிக்காமல் இருக்குமா?.
ஆனால் எப்படி என்ற கேள்வி எழுகிறது. எதிரொலி கொள்கையின் அடிப்படையில் இரண்டு ஒத்த
அதிர்வுகளைக்
கொண்டுள்ளவை ஒன்றுக்க
ொன்று ஆதரவாக
இயங்கும் என்பதை அனைவரும் அறிவர்.
நம்முடைய உடல் இயல்பாக அதிக ஓய்வுடன் இருக்கும் நிலையில்
வினாடிக்கு 7.8 முதல் 8 சைக்கிள் (cycle)வரை அதிர்வுகளைக்
கொண்டுள்ளது.
ஆல்பா மூளை அலைகளும் ஓய்வான நிலையில் வினாடிக்கு 8 சைக்கிள் அதிர்வுகளையே கொண்டுள்ளன. பூமி கூட வினாடிக்கு 8 சைக்கிள் என்ற
அளவிலேயே அதிர்கிறது.
உலகில் உயிர் வாழும்
ஒவ்வொரு உயிரின்
நரம்பு மண்டலமும் இந்த
அதிர்வெண்ணுக்குஇயைபுடையதாகவே உள்ளது.
இதையெல்லாம் ஏராளமான
பரிசோதனைகள் மூலம் ஆராய்ந்த டாக்டர் ஹான்ஸ்
ஜென்னி அதிர்வெண்ணின்
ஸ்தாயி அல்லது சுருதி மிகவும் அதிக அளவில் இருந்தால் ஜியாமட்ரி வடிவங்கள்
சிக்கலானதாக உள்ளன
என்று கண்டறிந்தார்.
ரகசிய சாஸ்திரங்கள்
__________
இந்த அடிப்படையில்
ஒவ்வொரு யந்திரத்திற்கும்
ஒரு வடிவ ஆற்றல் அல்லது உருவ ஆற்றல் உள்ளது என்று ஆகிறது.
அதாவது ஒவ்வொரு வடிவமு
ம் ஒரு சக்தியை உமிழ்கிறது. இதன் அடிப்படையிலேயே தேவைக்குத்
தக்கபடி யந்திரங்களை ஒலியின்
அடிப்படையில் நமது பண்டைய ரிஷிகள் அமைத்தனர்.
யாக சாலை குண்டங்களும் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட
திசையில் அமைக்கப்படுவது மரபு.
டேவிட்டின் நட்சத்திரம், பிரமிட், ஸ்ரீ சக்கரம் போன்ற
ரகசிய சாஸ்திர அமைப்புகள்
எல்லா நாகரிகங்களிலும்
இருந்து வருவது ஆச்சரியப்படும்
விஷயம் அல்லவா?
புதிய ஒலி இயல்
ஹான்ஸ் ஜென்னி தனது இயலை cymatics
என்று குறிப்பிட்டார் இந்தச்
சொல் கிரேக்க வார்த்தையான kyma (அலை என்று பொருள்படும்)
என்பதிலிருந்து உருவானது.
ஆகவே,cymatics என்ற சொல்
எப்படி ஒலி அதிர்வுகள்
பல்வேறு வடிவங்களை உருவாக்குகின்றன,
அவை எப்படிப்பட்ட
செல்வாக்கை இதர அமைப்புகளின்
மீது ஏற்படுத்துகின்றன என்ற
பொருளை அடிப்படையாகக்
கொண்டுள்ளது என்று கூறலம்.
தான் உருவாக்கிய
கருவிக்கு அவர் டோனோஸ்கோப் (tonoscope)
என்று பெயரிட்டார்.

No comments:
Post a Comment