Thursday, 2 June 2016

மூன்றாவது கண் / நெற்றிக்கண்

நெற்றிக்கண்ணை பல முறைகளில் அதை தூண்டவும்(stimulate), திறக்கவும் வழி இருக்கிறது. இது தான் சரியான முறை என்று சொல்வதற்கு இல்லை.

யார் யார் எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

நெற்றிக்கண் திறப்பது தான் யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாக கருதப்படுவது ஆகும்.

புருவ மத்திக்கு பல பெயர்கள் உண்டு. அதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கவும் செய்கிறார்கள்.

மிஸ்டிக் செல்வம் அவர்கள்
அக்னி குண்டம், மயில்பாலம், வர்மத்தில் திலர்த தளம், சுடர் ஒளி தளம், புருசோத்தமன், சுதர்சனம், கோவிந்தன், ஆக்கினை, ஆஞ்ஜா இப்படியாக புருவ மத்திக்கு பல பெயர்கள் உண்டு.

ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர்.
மருத்துவர்கள் கண்ணுப் புழை என்னும் மூலிகையால் திறக்கின்றனர்.
ராஜ குருக்கள் வைரக் கற்களால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
மந்திரவாதிகள் ருத்திர பஸ்பத்தால் திறக்கின்றனர்.
சைவ மடாதிபதிகள் ஒரு முக ருத்திராட்சத்தால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளி மூலம் கண்ணைத் திறக்கப் பயிற்சி செய்கின்றனர்.
பழங்குடி மக்கள் புருவ மத்தியில் சூடு போடுகின்றனர்.
வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர்.
சாக்தர்கள் குங்குமம் இடுகின்றனர்.
பெண்கள் நெற்றி சுட்டி அணிகின்றனர்.
இஸ்லாமியர் முட்டி முட்டித் தொழுகின்றனர்.
பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்கின்றனர்.
யோகிகள் சுழுமுனை மந்திரத்தாலும், பிராணாயாமத்தாலும் யோகத்தாலும் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.

திபெத் நாட்டில் வாழ்ந்த ஒரு லாமாவின் "மூன்றாவது கண் திறந்த உண்மை அனுபவங்கள்" என்ற புத்தகம் படித்தேன் அவர்கள் கடுமையான பயிற்சிக்கு பின்னால் நெற்றியில் ஓட்டை போடுகிறார்கள். பிறகு அதை கட்டையால் அடைக்கிறார்கள். பிறகு அந்த லாமா சொல்கிறார் யாரை பார்த்தாலும் ஒரு ஆரா தெரிவதாக சொல்கிறார். அவர்களின் எண்ணங்களை அந்த ஆராவில் காண முடிவதாகவும் மற்றும் பல அனுபவங்களை அவர் விவரிக்கிறார் அந்த புத்தகத்தில்.

ஓம் என்று சொல்லும்போதும் மற்றும் சில மந்திரங்களை சொல்லும் போதும், சிலர் சில குறிப்பிட்ட அதிர்வு (Frequency) களில் ஒலியை நம் காதால் கேட்டாலும் நாம் தூண்டுகிறோம்.

யோகத்தாலும், வாசியாலும் திறக்க முடியும்.

அதே போன்று புருவ மத்தியில் நினைவை நிறுத்தி தியானம் செய்வதின் மூலமும் நாம் தூண்டுகிறோம்.
ஆக்கினை தியானம் என்று சொல்வார்கள்.

சரி யோகிகள், லாமாக்கள், மந்திரவாதிகள், சைவ மாடதிபதிகள் மற்றும் சித்தம் உடையவர்கள் ஒவ்வொரு மாதரி பயிற்சி எடுக்க சாதாரண பாமர மக்கள் அதாவது விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள், காவலாளிகள், அரசன் முதல் ஆண்டி வரை எப்படி தூண்டினார்கள்? இல்லை இவர்கள் நெற்றிக்கண்ணை தூண்டவில்லையா ?

இதற்கு நமது முன்னோர்கள் பக்தி மார்க்கத்தில் இவர்களையும் விட்டு வைக்க வில்லை என்பதே நிதர்சனம். அவர்களை அறியாமலே புருவ மத்தியை தூண்ட செய்தார்கள் எப்படி என்று பார்ப்போம்.

தினமும் அஞ்சனம் புருவ மத்தியில் இடுவது நமது வழக்கம்.
இதை எப்படி இடவேண்டுமென்றால் விரலால் குங்குமமோ, சந்தனமோ தொட வேண்டியது. கண்ணாடி பார்க்க கூடாது. அந்த காலத்தில் கண்ணாடியே இல்லை. சரி கண்ணாடி இல்லாமல் விரல் நுனியில் உள்ள சந்தனத்தை நமது இரண்டு கண்களால் உற்று நோக்க வேண்டும். அப்படியே அதை புருவ மத்தியை நோக்கி மெதுவாக நகர்த்தி இரண்டு கண்களால் பார்த்துக் கொண்டே புருவ மத்தியில் திலகம் இட வேண்டும். இப்பொழுது நமது இரண்டு கண்களும் மேல் நோக்கி பார்க்கும். புருவ மத்தியில் நமது நினைவு சென்று வரும். இதை செய்யும் போது நெற்றி பகுதியில் சிறிது வலியும் ஏற்படலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை.

மற்றொரு முறை.

ஆதி காலத்தில் அனைவரும் கோமணம் கட்டுவார்கள். அதில் முன்பக்கம் அப்படியே தொங்க விட்டுவிடுவார்கள். பின் பக்கத்தில் அந்த கோமணத்தை முடி போட்டு விடுவார்கள். அது உட்காரும்போதும் பின் பக்கம் சாயும் போதும் மூலதரத்தை தொடும், அப்பொழுது மூலாதாரம் தூண்டப்படும்.

பொட்டு வைக்கும் போதும் சில மூலிகைகளை கலந்து புருவ மத்தியில் வைத்து விடுவார்கள். அந்த மூலிகை புருவ மத்தியில் வைத்த சிறிது நேரத்தில் புருவ மத்தியில் ஒருவிதமான மென்மையான நமிச்சல் எடுக்க ஆரம்பிக்கும். அப்பொழுது ஆக்கினை தியானம் போல் நமது நினைவு தானாக புருவ மத்தியில் தான் இருக்கும்.

இந்த வழியில் நமது முன்னோர்கள் மக்கள் சாதார மக்களையும் நெற்றிக்கண்ணை தூண்டியது திறக்கப்பட்டது நன்கு புலப்படுகிறது.

1 comment:

  1. மஹா ம்ரித்யுஞ்ஜய மந்திரம் சத்தமாக ஜெபிக்க நெற்றிக்கண் திறக்கும்
    அடிபேனுக்கும் அந்த அனுபவம் உண்டு
    🙏நன்றி🙏

    ReplyDelete