Wednesday, 29 June 2016

செய்யத்தகுந்தவை Do's

அதிகாலையில் எழு
இயற்கை உணவை உண்டு வாழ்                       🏆
முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்து     🏆 மண்பானைச் சமையலை உண்
உணவை நன்கு மென்று உண்
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்
வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளா
கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காத
மலச்சிக்கல் இல்லாத
கவலைப்படாத
நாவடக்கம் உடை
படுத்தவுடன் தூங்கு
வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை
தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரி
கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்
கற்பு நெறி தவறாது வாழ்
மன்னி, மன்னிப்பு கே
ஈகை மனப்பான்மையை வளர்
நிமிர்ந்த முதுகுத்தண்டுடன்  உட்கார
இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்
தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகு
உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்
வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்
10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இரு

செய்யத்தகாதவை Don'ts

விலக்க வேண்டிய சில தவறான விஷயங்கள்:

1.குருவை கேலி அல்லது தூஷணை செய்தல்
2.குருவை தன் மனம்படி செயல்பட கட்டளையிடல்
3. குருவுடன் கொடுக்கல் வாங்கல் முதலியவை செய்தல்
4.குருவின் எதிரியோடு பழகுதல். குரு தூஷணையை காதால் கேட்டல்
5. குருவின் சொல்லும் செயலும் - உலக இயல்புக்கு மாறாக உள்ளதே என்று நினைத்தல்; சொல்லுதல்
6. குருவும் மனிதப்பிறவிதானே அதனால் குறைகள் இருக்கும் என்று எண்ணுதல்
7. பகவானே குருவாக எழுந்தருளி இருக்கிறார் என்பதில் சந்தேகம்
8. குரு ஸமர்ப்பணத்தில் லோபமான எண்ணம்
9. குருவின் கட்டளையை உலகுக்கு பயந்து செய்யாமல் இருத்தல்
10. பிறர் பார்க்கிறார்களே என்று குருவுக்கு நமஸ்காரம் செய்ய வெட்கப்படுதல்
11. குருவை நீண்ட நாட்கள் பார்க்காது இருத்தல்
12. குருபாதுகை தான் கிடைத்து விட்டதே இனி ஸ்தூலமாக குரு எதற்கு என்ற எண்னம்
13. குருவிடம் இன்ன பலன் பெறுவதற்கு இன்ன மந்த்ரங்கள் கொடுங்கள் என்று கேட்பது. இந்த மந்த்ரம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று அவரிடம் கூறுதல்
14. எனக்கு ஒரு விதமாகவும் அவனுக்கு ஒருவிதமாகவும் கொடுத்தீர்களே என்று குருவிடம் கேட்டல்; மந்த்ரம் இவ்வளவு சின்னது தானா? என்று கேட்டல்
15. வேறு சிஷ்யர்கள் குருவிடம் நெருங்கி பழகுதல் கண்டும், அவர்களுக்கு குரு செய்யும் அதிக சலுகைகள், உபசாரங்களைக் கண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அஸூயை(பொறாமை) கொள்ளுதல்
16. பிறர் குருவிடம் பேசும் போது அது என்ன என்று அறிந்து கொள்ள முயற்சி செய்தல்
17. எல்லா மந்த்ரங்களும் உபதேசம் பெற்றாகி விட்டது; இனி என்ன பயம் என்ற எண்ணம்
18. (குரு உறவினாக இருப்பின்) உபதேசம் செய்து கொண்ட பின்னரும் உறவு கொண்டாடுதல்
19. உபாஸனைகள் பல இருக்கும் போது, தான் செய்வதே சிறந்தது அல்லது முக்யமானது எனக் கூறிக் கொள்ளல்
20. தான் இதை இவ்வாறு செய்து முடித்தேன் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளுதல்
21. வாழ்கை நடத்த வேண்டிய பணம் இல்லாத நபர்களையும், உபாஸனைக்கு பணம் செலவழிக்க முடியாதவர்களையும் கேலி செய்தல்
22. தன் அனுபவங்களை குருவிடம் கூறாமல் பிறரிடம் கூறுதல்
23. மந்த்ர சாஸ்த்ர ரஹஸ்யங்களை ப்ரஸித்தமாக வெளியே பேசுதல்
24 அங்க ஹீனர்களை கேலி செய்தல்
25 ஸ்த்ரீகளை தூஷித்தல், துன்பம் உண்டாக்குதல் - மரியாதையின்றி அடி என்று அழைத்தல்
26 ஸ்த்ரீகளை அடிமையாக நினைத்தல் கேலியாக பேசி சிரித்தல்
27. எல்லா ஸ்த்ரீகளும் தேவியின் வடிவங்களே என்ற அடிப்படை உண்மையை நம்பாமை
28. நான்தான் குருவிற்கு அத்யந்தம், ப்ரியமானவன் என்று கூறல்

Tuesday, 28 June 2016

5 பஞ்ச

*பழமொழி : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!
பழமொழியின் பொருள் : இளம் வயதில் கற்பதே எளிது (ஐந்து என்பது அகவை ஐந்து அல்லது வயது ஐந்து என்னும் இளமைப் பருவத்தைக் குறிக்கின்றது).
Image result for ஐந்து

ஐம்புலன்கள்
ஐந்து உபச்சாரங்கள்
பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்திரியங்கள் இருக்கின்றன. பஞ்ச இந்திரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தைக் கிரகிப்பது கண். சப்தத்தைக் கிரகிப்பது காது. கந்தத்தை (மணம்) கிரகிப்பது மூக்கு. ரஸத்தை (சுவை) கிரகிப்பது நாக்கு. ஸ்பரிசத்தைக் கிரகிப்பது சருமம். இந்த ஐம்புலன்களும் புதிதாக ஒன்றை உண்டாக்கவில்லை. வெளியே உண்டா்கி இருக்கிற சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தங்களை இவை உணர்கின்றன. ரேடியோ ஸெட் மின்ஸார சப்த அலைகளைப் பிடிப்பது போல் இவை எப்படியோ வெளியில் இருப்பவற்றை அறிந்து பிடித்துக்கொண்டு மூளைக்கு அனுப்பி வைக்கின்றன. காரியம் செய்து புதிதாக ஒன்றைப் படைக்காமல், வெறுமே கிரகித்து நமக்கு அறிவிப்பதால், இந்தப் புலன்களுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர். கை, கால் போல காரியம் செய்கின்ற புலன்களுக்கு கர்மேந்திரியங்கள் என்று பெயர். நாக்கு ஞானேந்திரியமாக இருந்து ரஸத்தை உணர்வதோடு, பேச்சு என்று காரியத்தால் புதிதாக சப்தத்தைப் படைக்கவும் செய்வதால் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது.
ஞானேந்திரியங்களான ஐம்புலன்களுக்கும் ஆசிரயமாக இருப்பனவே பஞ்ச பூதங்கள் என்கிற ஆகாயம், காற்று, தீ, நீர், மண் ஆகிய பிரபஞ்ச சக்திகள். சப்தம் மட்டுமே ஆகாசத்தில் உண்டு. ஓம்கார நாதமாகிய பிரணவம் ஆகாயத்தில் நிறம்பியிருக்கிறது. பலர் கூடியிருக்கிற இடத்தில் பல தினுசான பேச்சுச் சப்தம் உண்டானாலும் 'ஓ' என்ற ஓசையொன்றே கேட்கிறது. சமுத்திரம் 'ஓ' என்கிறது. ஒரு சங்கைக் காதில் வைத்துக் கொண்டால் 'ஓ' சப்தம்தான் கேட்கும். "ஏன் 'ஓ' என்று கத்துகிறாய்?" என்றுதான் கேட்கிறோம். 'ஓ'வுக்கு ஒரு புள்ளி வைத்து முடித்தால் 'ஓம்' இதுதான் எங்கும் இருப்பது. வாயுவில் சத்தத்தோடு ஸ்பரிசமும் இருக்கிறது. நம்மீது காற்றுப்பட்டால் நமக்குக் காற்றுதான் படுகிறது என்று புரிகிறது அல்லவா? நெருப்புக்கு ஸ்பரிசத்தோடு ரூபமும் இருக்கிறது. தீயைக் கண்ணால் பார்க்க முடிகிறது. ஜலத்துக்கு இவற்றோடு ரஸம் (சுவை) என்பதும் உள்ளது. அதை நாம் நாக்கில் விட்டுக்கொண்டு குடிக்கிறோம். மண்ணுக்கு மணமும் உள்ளது. மண் என்றால் மண்ணில் விளைகிற எல்லாம் அதில் அடங்கும். நாம் கண்டும் கேட்டும், ருசித்தும், தொட்டும், முகர்ந்து பார்த்தும் இவற்றையெல்லாம் அநுபவிக்கிறோம்.
ஐம்புலன்களே நமக்கு வாழ்வின் சகல ஆனந்தத்தையும் சாத்தியமாக்குகின்றன. நல்ல சாப்பாடு, ரம்மியமான சங்கீதம், சுகந்தம், குளிர்ந்த தென்றல், பூரண சந்திரனின் காட்சி இவை நமக்கு ஐம்புலன்களாலே அநுபவத்துக்கு வருகின்றன. மனிதனுக்கு இந்த ஐம்புலன்களைத் தந்து, இவற்றுக்கு ஆகாரமாக வெளியே ஐம்பூதங்களிலிருந்து தோன்றும் சுவை, மணம் முதலிய அழகுகளையும் வைத்திருப்பவர் ஸ்வாமி. அவரது கிருபையால்தான் சகல இன்பங்களும் கிடைக்கின்றன. நம்மால் ஒரு மணி அரிசி சிருஷ்டிக்க முடியாது. ஸ்வாமியே இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, அதன் அழகுகளை நாம் அநுபவிப்பதற்காக நமக்கு பஞ்ச இந்திரியங்களையும் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். ஆனபடியால் நமது புலன்களால் அநுபவிக்கும் இன்பங்களை ஸ்வாமியின் நினைவோடு அநுபவிப்பதே நமது கடமையும் தர்மமுமாகும்.
அவருக்கு இந்த இன்பங்களை முதலில் அர்ப்பித்து அவரது பிரஸாதமாகவே இவற்றை நாம் ஏற்க வேண்டும். இந்த வழக்கம் நிலைப்பட்டால் ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்யத்தகாத எந்தப் பொருளையும் நமது புலன்களால் அநுபவிக்கக் கூடாது என்ற பக்குவம் உண்டாகும்.
பஞ்சேந்திரியங்களால் அநுபவிக்கும் பிரபஞ்ச வஸ்துக்களைப் பரமேசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணும் மனோபாவனையில் பிறந்ததுதான் பஞ்சோபசாரம் என்கிற ஐந்து உபாசாரங்கள். கோயிலிலும் வீட்டுப் பூஜையிலும் ஸ்வாமிக்குக் குறைந்தது ஐந்து உபசாரம் செய்யவேண்டும். ஸ்வாமியின் விக்கிரகத்துக்குச் சந்தனமிடுவது, புஷ்பம் போட்டு அர்ச்சிப்பது, தூபம் காட்டுவது, தீபாராதனை செய்வது, நைவேத்தியம் பண்ணுவது ஆகியனவே பஞ்சோபச்சாரங்கள். இவற்றில் சந்தனமிடுவது கந்தம் - பிருதிவி தத்துவம் என்ற மண்ணைக் குறிப்பது. புஷ்பம் ஆகாயத்தைக் குறிப்பது. தூபம் வாயுவைக் குறிப்பது. தீபம் அக்னியைக் குறிப்பது. நைவேத்தியம் அமிருதமாகிய நீரைக் குறிப்பது, எனவே பஞ்ச பூதங்களும் பஞ்சோபச்சாரத்தில் அடக்கம். பஞ்ச பூதங்களிலிருந்துதான் பஞ்சேந்திரியங்களின் அத்தனை நுகர்ச்சி வஸ்துக்களும் உண்டாகின்றன. ஆகவே, பஞ்சோபச்சாரத்தில் ஈசுவரன், பிரபஞ்சம், ஜீவன் எல்லாம் ஒன்றுபடுத்தப் பெறுகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++

1.பஞ்ச கன்னியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.

17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்

++++++++++++++++++++++++++++++++
ஐந்து எஸ் (5S) என்பது பணித்தள அல்லது பணியிட அமைப்பு முறையைக் குறிப்பதாகும். இது ஜப்பானியர்களால் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானியப் பொருள்கள், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.

பெயர்க் காரணம்[தொகு]

ஐந்து எஸ் பின்வரும் ஐந்து ஜப்பானிய சொற்களின் முதல் எழுத்தைஆங்கிலத்தில் எழுதி இணைத்த ஒரு குறுஞ்சொல்.
  • முதல் எஸ்: செய்றி - வகைப்படுத்து (Sort)
  • இரண்டாவது எஸ்: செய்டன் - நிலைப்படுத்து (Stabilize)
  • மூன்றாவது எஸ்: செய்ச்சோ - ஒளிர் (Shine)
  • நான்காவது எஸ்: செய்கெட்சு - தரப்படுத்து (Standardize)
  • ஐந்தாவது எஸ்: ஷிட்சுகே - நீடிக்கச்செய் (Sustain)
இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குப்படுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும்.

செய்றி[தொகு]

இது பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றுள் தேவையானவற்றைத் திரட்டி தேவையற்றவற்றை அப்புறப்படுத்தும் செயலைக் குறிக்கும் சொல்.

செய்டன்[தொகு]

இது பொருட்களுக்குரிய இடத்தையும், இடத்துக்குரிய பொருட்களையும் தேர்ந்தெடுத்து, பெயர்க்குறியிட்டு பராமரிக்கும் செயலைக் குறிப்பதாகும். இச்செயல் ஒவ்வொரு பணியையும் எளிமைப்படுத்துவதைக் குறிகோளாகக் கொண்டுள்ளது.

செய்சோ[தொகு]

இது பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை குறிக்கும் சொல். பணித்தொடக்கத்திலும், பணிமுடிவிலும் பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை வழக்கபடுத்திக் கொள்வதை வற்புறுத்தும் சொல்லாகவும் இது அமைகிறது. அசுத்தமான பொருட்களை சுத்தம் செய்யும் போது பொருட்களின் தரக்குறைபாடுகள் இருக்குமே எனில் அவற்றை வெளிப்படுத்தவும், குறை நீக்கவும் முடிகிறது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் மட்டுமே சென்றடைகிறது.

செய்கெட்சு[தொகு]

இது முன் சொல்லப்பட்ட மூன்று செயல்களை வரையறுக்கப்பட்ட வழிமுறையில் செய்வதைக் குறிக்கும் சொல். இந்த வரையறைகள் பொறுப்புகள், பொறுப்பாளர்கள், செய்முறைகள், செய்கருவிகள் இவையனைத்தையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும்.

ஷிட்சுகே[தொகு]

இது முன் சொல்லப்பட்ட நான்கு செயல்களையும் தொடர்ச்சியாகவும் தொய்வில்லாமலும் தன்னொழுக்கத்துடனும் செய்வதைக் குறிப்பதாகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
ஐந்து ஐந்து ஐந்து அல்லது 555இயக்குனர் சசி இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.

Monday, 27 June 2016

அரண் / வியூகம்

இது அஷ்ட கர்மங்களில் ஒன்றான எளிய முறை உச்சாடன மந்திரம் ஆகும் உச்சாடணம் என்றால் எதிரியை நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு அல்லது குடும்பத்தை விட்டு விலகி ஓடச்செய்வதாகும் திரும்பி அவர் உங்கள் வழிக்கு வரவே மாட்டார்

உங்களை யாராவது சதா தொந்தரவு செய்து கொண்டிருந்தால் அவர்கள் உங்களை நெருங்க முடியாதபடி இருக்கும் இடத்தை விட்டு ஓட செய்து விடும்

இது கண்ணுக்கு தெரிந்த எதிரியையும் கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் தண்டித்து விடும்

கையில் ஊதுபத்தி அல்லது கற்பூரம் வைத்துக் கொண்டு மந்திரத்தை 108 தடவை உருவேற்றி பின்னர் கொளுத்தவும் உருவேற்றும்போது எதிரியை மனதில் நினைத்து கொண்டு மந்திரம் உச்சரிக்கவும்

உங்களால் முடிந்தால் மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து அறுகம்புல்லை அவர் தலையில் வைக்கவும் நெய்விளகேற்றி கொஞ்சம் பொட்டுக்கடலை சர்க்கரை பசும்பால் நைவேத்தியமாக வைக்கவும் சீக்கிரம் பலன் கிடைக்கும் பிரச்சினை தீரும் வரை தினசரியோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ செய்து வரவும்

இவை எதுவும் இல்லாமல் வெறும் மந்திரம் மட்டுமே உச்சரித்தும் வரலாம் ஆனால் பலன் தாமதமாகும்

இது அனுபவ உண்மை

மந்திரம்

ஓம் கம் கணபதி நமஹ சத்ரு உச்சாடணம் க்குரு க்குரு ஸ்வாஹா

இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்துவோற்கு தண்டணை நிச்சயம் அதாவது எதிரிக்கு பதிலாக நீங்கள் மன நிம்மதி இல்லாமல் உங்கள் குடும்பத்தை விட்டு ஓட செய்துவிடும் அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகும் எனவே எதிரியாக இல்லாத யார் மீதும் தவறாக ப்ரயோகம் செய்ய வேண்டாம்

வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி

ஆகாச கருடன்

கண் திருஷ்டி பில்லி சூன்யம் விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு
வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு,  சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).
இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.
கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு.இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு"என்ற பெயர் தான் முன்பு அனைவருக் கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.

இம் மூலிகை காடுகள்,வனங்களில்,மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சை யாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50  வருடங்களுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு, நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.
நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்.அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும்,ஓடி விடும்.

இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.
உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது."சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு.ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது .இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.

இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு.அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி,தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி,சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர் கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன்கள் :-

இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல் வேண்டும்.இது அதிக கசப்பு சுவை கொண்டது.

சிறப்பாக பாம்பு விஷங்கள்,தேள்,பூரான் விஷங்கள் எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு  இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்,மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும்.

சேலம் மாவட்டம்
மேட்டூர் அனை என்
இடம் இலவசமா ஆகாச கருடன் கிடைக்கும் 9688509257

ஏவல், பில்லி, சூனியம்

மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…!  நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும்.இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.  இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது.  இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை.வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள்.  ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.  கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.



மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள்.  அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.  இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்


செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர்.  ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி.மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு.  பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான்.சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை.தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன.அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார்.அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.



இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.
1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
இதில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து அந்த பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.



மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.  ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை.  யார் காலிலும் படக்கூடாது.  மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் 

Saturday, 25 June 2016

துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க

துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.
வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.
(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும்.காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம்.நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.

அமானுஷ்ய பரிகாரங்கள்
(1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
(2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
(3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
(4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்
(5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்
(6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள்

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. அது என்ன அடைப்பு ? அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான். தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி,6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். இதில் அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவார்கள். கடந்த காலங்களில் கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது.27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது. இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு, கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சிபெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்

Thursday, 23 June 2016

பஞ்சகவ்யம்


பஞ்சகவ்யம் பெருமைகள்
பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. குணமுடையன இவற்றின் கலவை சிறந்த சத்துணவு . கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி
பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி
பசும்நெய்:மோட்சம்
கோசலம் :தீட்டு நீக்கம்
கோமலம்:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும்.கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் காரணமாககருவறைகள் , சிலைகள், இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு அதிகமாக உண்டு.

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக மதிக்கபடுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல் அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை :

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் தன்மை கொண்டவை, என்றென்றும் புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று விளங்குகின்றன.

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர். பசுவின் பால்,தயிர், நெய். கோமயம், சாணம் னும் இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் எனப்படும்
இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும்.

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் :1 அளவு
பசுந்தயிர் :2 அளவு
பசும்நெய்  அளவு
கோசலம் :1 அளவு
கோமயம் : 1 அளவு
தர்ப்பை கலந்த நீர் 3 அளவு

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது . பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன .பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்வு உண்டு.

பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும்
நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும்,
கருநிறப் பசுவிடமிறந்து நெயும் ,
செந்நிற பசுவிடமிருந்து கோசலமும்,
தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்கலில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியத்தை தமிழில் "ஆனைந்த "என்பர் .

பசும் பாலில் சந்திரனும் ,
பசுவின் தயிரில் வாயு பகவானும்,
கோமயத்தில் வருண பகவானும்,
பசும் சாணத்தில் அக்னிதேவனும் ,
நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .

வேளாண்மையில் பயன்பாடு
1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.
பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.
• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

காலை மனைவி பிடித்து விட்டால்

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம்பெருகி
லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும். 

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம்பெருகி
லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில்வீற்றிருக்கும் 
மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார்பிடித்து விடுவதாக பல்வேறு 
கோவில்களில் சிற்பங்கள் மற்றும்உருவப் படங்களைப் பார்த்திருப்போம்
மகாவிஷ்ணுவும்லட்சுமிதேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் 
இதை நாம் பெரிதாகயாரும் எடுத்துக் கொள்வதில்லைஆனால் 
இதில் மாபெரும் ஒருஉண்மையை நமது முன்னோர் மறைத்து 
வைத்திருக்கிறார்கள்.அதாவது கணவனின் காலை மனைவி 
பிடித்து விட்டால்குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை 
மறைத்துவைத்துள்ளனர்ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு
முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் 
ஆளுமைக்கு கீழ் வருகின்றதுஅதே சமயம் பெண்களின் கைபாகத்தை 
சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர்ஜோதிட ரீதியாக 
வகுத்துவைத்துள்ளனர்.
  
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ளகணுக்கால் 
வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்குஉட்பட்டிருப்பதால்
இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்கைகள் பட ஆணுக்கு பணம் 
சிறிது சிறிதாக வந்து சேரும்.எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான 
லட்சுமி தேவிமகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்,
ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்
காலமாற்றத்தால் ஆண் அதிக்கம்பெண் அடிமைத்தனம் போன்ற 
பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு 
எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது 
மறைந்து விட்டது வேதனைதான்

Wednesday, 22 June 2016

தீர்த்தம்

தீர்த்தம்,  ராமேஸ்வரம்


22 தீர்த்தங்கள் :

1.மகாலட்சுமி தீர்த்தம்
2.சாவித்திரி தீர்த்தம்
3.காயத்திரி தீர்த்தம்
4.சரஸ்வதி தீர்த்தம்
5.சங்கு தீர்த்தம்
6.சக்கர தீர்த்தம்
7.சேது மாதவர் தீர்த்தம்
8.நள தீர்த்தம்
9.நீல தீர்த்தம்
10.கவய தீர்த்தம்
11.கவாட்ச தீர்த்தம்
12.கெந்தமாதன தீர்த்தம்
13.பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
14.கங்கா தீர்த்தம்
15.யமுனா தீர்த்தம்
16.கயா தீர்த்தம்
17.சர்வ தீர்த்தம்
18.சிவ தீர்த்தம்
19.சாத்யாமமிர்த தீர்த்தம்
20.சூரிய தீர்த்தம்
21.சந்திர தீர்த்தம்
22.கோடி தீர்த்தம்

Monday, 20 June 2016

தர்மங்கள்

மஹா பெரியவா சொன்ன 
எளிதான தர்மங்கள் - 2

பெண்கள்:

ஸினிமா…இன்னிக்கி…ஸமுதாயத்ல உண்டாக்கற.. சீரழிவு ஜாஸ்தி! ஸினிமாவை… தங்களோட பொழைப்பா… கொண்டு, தங்களை… ரொம்பவே expose பண்ணிண்டுட்டதுனால, இன்னிக்கி…. பொண்களோட… இயற்கையான நாணமும், நல்ல பண்புகளும் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு. Atomic Power மாதிரி, ஸினிமாக்கள்  நல்லதுக்கும், ஆனால், அதிகமா… கெட்டதுக்கும் பயன்படறது.

தங்களுக்குண்டான குடும்ப கார்யங்களை, கடமைகளை விட்டுட்டு, social service-னு கெளம்பக் கூடாது.

பொண்கள் வீட்டோட இருந்தா… ‘அடஞ்சு கெடக்கறது’ ன்னு அர்த்தமில்ல! பொண்கள் வீட்ல அடைபட்டிருக்கணுமே-ன்னு நெனச்சு, பாதுகாப்பில்லாத எடங்கள்ள வேலை செஞ்சு, திண்டாடறதை விட,  நம்ம ஶாஸ்த்ரங்கள், புராணங்கள், ஸம்ஸ்க்ருதம் இதுகள… படிக்கறதையும், அப்படிப் படிச்சத… கொழந்தேளுக்கும், மத்தவாளுக்கும் மனஸ்ல.. ஸதா உருவேத்தி, அவாள… நல்ல  ப்ரஜைகளா... உருவாக்கறதே… பொண்களுக்கு லக்ஷணம். வாஸ்தவத்ல, ஸமுதாயத்துக்கு.. பொண்களோட இந்தப் பங்கு.. ரொம்ப பெருஸு!

‘வீட்ல… புருஷனுக்கு அடங்கி இருக்கறது முடியாது! பணத்துக்கு, அவன்ட்ட கையேந்திண்டு நிக்க முடியாது! பெண் ஸ்வதந்த்ரம் வேணும்! ‘…ன்னு…கொடி தூக்கறவா, அதுனால, ஏதோ வேலைக்கு போறா! அப்டி வேலைக்கு போற வழில…பஸ்ஸுல, ட்ரெயின்ல….எத்தன கஷ்டங்களுக்கும்,  அவமானத்துக்கும் ஆளாறதோட, வேலை செய்யற எடத்துலயும். மேலதிகாரிகள், ஸக ஊழியர்கள்னு, ஆயிரம் பேருக்கு அடங்கித்தான் வேலை செய்ய வேண்டியிருக்கு!

ஒரு புருஷனுக்கு அடங்கி வாழ்கை நடத்த முடியாதவா….. ஆயிரம் புருஷாளுக்கு அடங்கி, திட்டு வாங்கி, பயந்து..அங்க இங்க ஓடி…. கொழந்தேளையும் ஸெரியா கூட இருந்து பாத்துக்க முடியாம, கடஸீல…. வாழ்க்கை முடியறப்போ…. யோஜிச்சுப் பாத்தா….. பணம் ஒண்ணுதான் அவாளுக்கு ப்ரதானமா இருந்திருக்கறதும், ஆனா…. வாழ்க்கைல….அழகான, நல்லதான… எத்தனை விஷயங்களை, அவா கோட்டை விட்டிருக்கறதும் புரியவரும். அப்போ…. என்ன ப்ரயோஜனம்?…

பொண் கொழந்தைகள், கன்யா பொண்கள், ஸுமங்கலிகள்…இவாள்ளாம்… எப்பவுமே நெத்திக்கு இட்டுக்கணும, பாழ் நெத்தியா… இருக்கக் கூடாது.

ஸுமங்கலிகள்… நெத்தி வகிடுலயும், நெத்திலயும்… குங்குமம் வெச்சுக்கணும்.

கருப்பு பொட்டு… அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வெச்சுக்கறதும், பொட்டு வெச்சுக்காம இருக்கறதும் ஒண்ணுதான்.

பொண்களுக்கு… நகைகள், fashion-க்காக இல்ல! கன்யாவா இருக்கறச்சே… அவளுக்கும், கல்யாணமானதும் அவளோட புருஷனுக்கும், அவை… ரக்ஷைகள்.

திருமாங்கல்யத்தை.. மஞ்சக்கயத்துலதான் கோர்த்துக்கணும். தெனோமும்.. மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சா… அழுக்கோ, பிஸுக்கோ அதுல ஏறாது.

காதுல… தோடு பெருஸா இருந்தா, அவ புருஷனுக்கு ஆயுஸ் ஜாஸ்தி! அம்பாளோட தாடங்க  மஹிமையாலதான், ஹாலாஹல விஷம் கூட, பரமேஶ்வரனை ஒண்ணும் பண்ணல!

கழுத்துல கருகமணியும், கைகள்ள,  கண்ணாடி வளையலும், அவஸ்யம்.

ஸ்வர்ணம்[தங்கம்] ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி! பொண்கள் கால்ல.. போட்டுக்கற கொலுஸு, மெட்டி இதையெல்லாம்…. தங்கத்ல பண்ணி, கால்ல போட்டுக்க கூடாது. அம்பாளோட பாதங்கள்ள மட்டுந்தான்… தங்கத்தை போடணும்.

வெள்ளிக்கெழமை… கண்ணாடி வளையல் இருக்கற பொட்டி… காலியா.. இருக்கக்கூடாது.

கன்யாப் பொண்களும், ஸுமங்கலிகளும் தலை முடியை வெட்டிக்கக் கூடாது.

இப்போ… ஜீன்ஸ் பான்ட் போட்டுக்கறதுக்காக, திருமாங்கல்யத்தையே கழட்டி வெச்சிட்டு போற அளவுக்கு… பொண்கள் ‘முன்னேறியிருக்கா!’. பொண்கள் செய்யற.. இந்த மாதிரி, பல ஆகாத கார்யங்களாலும், ‘பணத்தையும், ஸ்டேடஸ்ஸையும், வெளிநாட்டு மோஹத்தையும்’ மட்டுமே அடிப்படையா வெச்சிண்டு, பெத்த கொழந்தேள்-லேர்ந்து, புருஷன், மாமனார், மாமியார் அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, “தான், தன் ஸுகம் “ன்னு மட்டுமே வாழறதுனால, அப்படிப்பட்ட பொண்களை, அவாளோட பெத்தவாளும் எடுத்துச் சொல்லி திருத்தாம, encourage வேற பண்றதாலும், இன்னிக்கி….பல பொண்களோட கல்யாண வாழ்க்கை, நிம்மதியில்லாமலும், புருஷன், ஸொந்தக்காரா எல்லார்கிட்டேர்ந்தும் பிரிஞ்சு… அமங்கலமா.. இருக்கறதை…கண்கூடா… பாக்கறோம்.

பொண்களுக்கு வைதவ்யம் [கணவனை இழப்பது]…ங்கறது… பகவான் குடுத்த ஸன்யாஸம். அது ஶாபமில்லை!

பொண்களுக்கு முடிஞ்சவரைக்கும்… கொறஞ்ச வயஸ்லேயே கல்யாணம் செஞ்சுடணும். அப்போதான் புகுந்த வீட்ல இருக்கறவாளை புரிஞ்சிண்டு, அவாளுக்கு அனுஸரணையா நல்லபடி வாழ முடியும்.

பொண்கள்… காயத்ரீ மந்த்ரத்தையோ, வேத மந்த்ரங்களையோ, சொல்லக் கூடாது. அதெல்லாம் மொறையா… பூணூல் போட்டுண்டவா… மட்டுந்தான் சொல்லணும். பிள்ளைக் கொழந்தைகளே கூட, பூணூல் போட்டுக்கறதுக்கு முன்னாடி, வேத பாடம் சொல்லக் கூடாது.

பொண்களுக்கு… லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி, மாதிரி ஸ்லோகங்களே ஸ்ரேஷ்டம். பொண்கள்… விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது.

பொண்கள் எப்பவுமே… பொடவைதான் கட்டிக்கணும். புருஷாளே.. கால் தெரியும்படி ட்ராயர்-ல்லாம் போட்டுக்காம… வேஷ்டி கட்டிக்கணும்-ங்கறச்சே… பொண்கள் இப்போல்லாம்… வீட்டுலயும், வெளிலயும் ‘ஸ்வதந்த்ரம்’ன்னு போட்டுண்டு போற dress-கள்…. புருஷாளவிட….ரொம்ப மோசமா இருக்கு.

கோவிலுக்கோ, மஹான்களை தர்ஶனம் பண்ணப் போறச்சயோ…கட்டாயமா.. ஆண்கள்-வேஷ்டியும், பொண்கள்-பொடவையும், பொண்கொழந்தைகள்-பாவாடை சட்டையும், கன்யாபொண்கள்- தாவணியும்… கட்டிண்டுதான் போகணும்.  அதையும், கௌரவமான மொறைல போட்டுக்கணும். எப்பவுமே… பொறத்தியாரோட கவனத்தை திசை திருப்பும்படியான dress-களையோ, நகைகளையோ போட்டுண்டு போகக் கூடாது.

பொண்கள் வீட்டுலயும், வெளிலயும்.. தலையை விரிச்சுப் போட்டுண்டு இருக்கக் கூடாது. எழவு [ஸாவு] விழுந்த வீட்டில்தான், தலையை விரிச்சுப் போட்டுண்டிருப்பா. பொண்கள், தலையை முடிஞ்சுக்காம, விரிச்சுப் போட்டுண்டு இருக்கற வீடுகள்ள….தரித்ரம் தாண்டவமாடும். லக்ஷ்மீகரம் போய்டும்! ‘லக்ஷ்மீகரம்’-னா…வெறும் பணம் காஸு மட்டுமில்ல! மனஸ்ல, ஸந்தோஷம், நல்ல குடும்ப வாழ்க்கை, குடும்பத்ல அமைதி, நிம்மதி…. 

இதெல்லாம்தான் உண்மையான லக்ஷ்மீகரம்.

Saturday, 18 June 2016

எலுமிச்சம்பழம், மிளகாய் Lemon in vehicles front

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!