Wednesday, 20 July 2016

வெட்டிவேர் விசிறி

வெட்டிவேர்
Image result for வெட்டிவேர் விசிறிImage result for வெட்டிவேர் விசிறி
குளிர்பானங்கள், இளநீர், மோர், பழங்கள், போன்றவை கோடையைச் சமாளிக்க உதவுகின்றன. இவற்றையெல்லாம்விட கோடைத் தொல்லைகளை வெல்ல மிகவும் உதவுவது வெட்டிவேர் ஆகும். வெட்டிவேரானது வெம்மையை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவது மட்டுமின்றி, நறுமணத்தையும் தருகிறது. மேலும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையுடையது.
 வெட்டிவேரில் மணம், குணம் தரும் ஒரு வகையான வேதிப்பொருள் அடங்கியுள்ளது. இதிலிருந்து மணம் தரும் ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் இடம் பெறுகிறது.

 வெட்டிவேரைத் துண்டுகளாக வெட்டிக் குடிநீரிலிட்டுப் பயன்படுத்தலாம் பொடியாகவோ, கஷாயமாகவோ, எண்ணெய்யாகவோ பயன்படுத்தலாம். விசிறி, பாய், திரை தயாரித்து பயன்படுத்தலாம். வேர்களை நீரிலிட்டு அல்லது சந்தனத்துடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம்.

 வெட்டிவேர் பல்வேறு சிறப்புக் குணங்களைத் தன்னகத்தே கொண்டது. குளிரூட்டி, பசியூட்டி, சிறுநீர்ப்பெருக்கி போன்ற தன்மைகளைக் கொண்டது. உடல் வெம்மையை நீக்கி குளிர்ச்சியூட்டுகிறது. வேர்க்குரு, வேனல்கட்டிகளைக் குணப்படுத்தும். உடல்சூடு, கண் எரிச்சல், தலைவலி இவற்றைக் குணப்படுத்தும். கோடையில் ஏற்படும் நீர்ச்சுருக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும்.

 • வெட்டிவேரை நீரிலிட்டு காய்ச்சி நீரை வடிகட்டி அரை கப் வீதம் மூன்று வேளை அருந்த வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு தீரும்.
 • வேரை அரைத்து உடல் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில் தேய்க்க அரிப்பு, எரிச்சல் மாறும்.
 • சந்தனப்பொடியுடன், வெட்டிவேர்ப்பொடி கலந்து உடலில் பூசிக் குளிக்க உடல் மணம் வீசும். தோல் நோய்கள் ஏற்படாது.
 • வெட்டிவேர்ப்பொடியுடன், சந்தனப்பொடி கலந்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் பொடியை இளநீரில் கலந்து வேர்க்குரு. வேனல்கட்டி மேல் பூசி அரை மணிநேரம் ஊறிய பின் குளிக்க வேர்க்குரு, வேனல்கட்டி மாறும்.
 • இரவில் வெட்டிவேரைத் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வடிகட்டி அரை கப் வீதம் மூன்று வேளை அருந்த உடல் சூடு தணியும்.
 • வெட்டிவேரை மோர் அல்லது பாலில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட கோடைத் தொல்லைகளான நா வறட்சி, அதிக தாகம் போன்றவை தீரும்.
 • வெட்டிவேர்ப் பொடியை பாலில் கலந்து இனிப்பு சேர்த்துச் சாப்பிட கண் சூடு, தொண்டை வலி, நா வறட்சி, அதிக தாகம் தீரும்.
 • மண்பானை நீரில் சிறிதளவு வெட்டிவேரைப் போட்டு வைத்துக் குடித்தால் வெம்மை தீரும். தேக அனல், நீர்ச்சுருக்கு மாறும்.
 • வெட்டிவேர்ப் பொடியை, நீரில் கலந்து சாப்பிட அஜீரணம் தீரும்.
 • பொடியைத் தேனில் குழைத்து உண்ண வயிற்றுப்பிணிகள் தீரும்.
 • வெட்டிவேர் விசிறி குளிர்ச்சியை ஊட்டும்.
 • வெட்டிவேர் தட்டியை வீடுகளில் கட்டி நீரால் நனைக்க ஏர்கண்டிஷன், ஏர்கூலர்போல குளிர்ச்சியைத் தரும்.
 • மின்விசிறியின் கீழ் வெட்டிவேர்ப் பாய் அல்லது வெட்டிவேர் தட்டியை நனைத்து வைத்தால் அரை முழுவதும் குளிர்ச்சி பெறும்.
 • வெட்டிவேர், சந்தனம், மஞ்சள் இம்மூன்றையும் சேர்த்து அரைத்து கொப்புளம், கட்டி மேல் தடவி வர அவை ஆறிவிடும்.
++++++++++++++++++++++++++++++++++++++
விசிறிகளின் மருத்துவப்பயன்கள்.
1)தென்னை,பனை,ஈச்ச மட்டை விசிறிகளினால்:வாதம், பித்தம், கபம் இவைகளினால் ஏற்படும்பிணிகளும் சுவையின்மையும் நீங்கும்
2)வெட்டிவேர் விசிறியினால்: தாகம்,உடல் எரிச்சல்,பைத்தியம் இவை நீங்கும்.மன ஊக்கம் ஏற்படும்.
3)மயில்தோகை விசிறியினால்:வாத பித்த நோய்கள், சன்னி, பாதம். வயிற்றுவலி இவை தீரும்.
4)வெண்சாமரத்தினால் விசிறியினால்: வெப்பம், மயக்கம், மூர்ச்சை, வியர்வை, ஆயாசம் இவை தீரும். புணர்ச்சியில் இச்சையும், செல்வமும் பெருகும்.

No comments:

Post a Comment