Saturday, 30 July 2016

அர்த்த சாஸ்திரம்

அர்த்த சாஸ்திரம்

👍1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

👍2 ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

👍3 ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

👍4 ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

👍5 நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

👍6 உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

👍7 கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

👍8 காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

👍9 பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

👍10 சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

👍11 சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
👍கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍12 விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍13 இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍14 கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

👍15 அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

👍16 யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

👍17 எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

👍18 அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

👍19 சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

👍20 வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

👍21 அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

👍22 எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

👍23 மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

👍24 பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

👍25 கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

👍26 வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

👍27 பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

👍28 வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

👍29 கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

வராஹி

கோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்

வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு
பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்

இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.

வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள்

வராஹம் என்றால் என்ன? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான் . என்ன உதவி தெரியுமா ??
பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

சரி அங்கே உந்துதல் , தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி , நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும் ? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்??என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடைய குண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி

இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..
அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்,
ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும் ஆயுதங்களும்.
சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் ? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , எதிரிகள் குறைவார்கள்{அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது} ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது

வராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.

இப்படி வராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.

ஆனால் வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள்.

வராஹி காயத்திரி

ஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய
தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத்

மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
🌺🌺🌺🌺🌺🌺🌺
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்*
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
🌹🌹🌹🌹🌹🌹🌹
வராஹி மூல மந்திரம்
(1)
ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

(2)
ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸத :
🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க வளமுடன்


Wednesday, 27 July 2016

தாடி

வசீகரம்

 நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் 'சொல்லுடா..' என்றான்.

    'எங்கடா இருக்க... இண்டர்வியூ போனியே என்னாச்சு..' என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

    'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்றான் அன்வர்.

    'ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்... நான் அப்பறமா கால் பண்றேன்' என்று ரமேஷ் கூறியதும், 'தேங்க்யூடா..' என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.

    ஹெச்.ஆர். அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.

    'மேய் ஐ கம் இன் சார்...'

    'எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்...'

    'தேங்க்யூ சார்...'

    'குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க... இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..' என்றார் ஹெச்.ஆர்.

    'சரிங்க சார்...' என்றான் அன்வர்.

    'உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க...உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..'

    'தேங்க்யூ சார்...'

    'ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி தாடி வைக்கக் கூடாது.  தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்...' என்றார் ஹெச்.ஆர்.

    'சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்...' என்றான் அன்வர்.

    'இது கம்பெனி ரூல்ஸ்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது...'

    'ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்... தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா..? தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா..? ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..?'

    'ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்...?' என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,

    'தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..' என்று பதிலளித்தான் அன்வர்.
    'நன்மையா..? தாடி வைக்கிறதுனாலையா..? சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..' என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.

    'இல்லை சார்.. அப்படி இல்லை..'

    'தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..?'
 
    'இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார்.  விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது.  அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது...'

    'வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..?'

    'நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கண்ணமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது...  தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUS என்ற சுரப்பி சுரக்கிறது.  இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது.  தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.  பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.  ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும்.  தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது.  முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது.  இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார்.  அதனால்தான் முஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...'

    'வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ்  இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே...?'

    'அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்..  உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு..Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள்தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி  மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா..? ஏதும் சாதிக்கலையா..? தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..'

    'எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது.  தேங்ஸ் அன்வர்.  உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும்தான் எங்க கம்பெனிக்குத் தேவை.  வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு நாள்ல வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..'

    'தேங்க் யூ சார்..' என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.

    இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.இரண்டு நாட்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது.

-ill,M. ஷாஜஹான்.

Monday, 25 July 2016

மா


மா, மாம்பட்டை,  மாங்கொட்டை, மாம்பழம், மாங்காய், மாம்பூ, கொழுந்து இலை,  மாவிலை, மாமரம்,

மாவிலை:-

மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

கிருமிநாசினியான மாவிலை

கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

Scientific classification:-
-----------------------
Kingdom: Plantae
(unranked): Angiosperms
(unranked): Eudicots
(unranked): Rosids
Order: Sapindales
Family: Anacardiaceae
Genus: Mangifera
Species: M. indica

Binomial name:-
----------------
Mangifera indica
L.

Synonyms:-

-------------
Mangifera austro-yunnanensis Hu[1]

மாம்பூவும், பட்டையும்

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

பித்த வெடிப்பு குணமாகும்

பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மாங்காய்

மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்

மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம். கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

உதிரப்போக்கு கட்டுப்படுத்தும்

மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

Saturday, 23 July 2016

பஞ்ச பாத்திரம்

பஞ்ச பாத்திரம்

பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை இங்கே பதிவு சொல்கிறேன்
1.இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.
அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.
துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி
ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.
இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'.
இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.
இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.
இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
~ சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,
~ திருமாலுக்கு உகந்தது துளசி,
~ அம்மனுக்கு வேப்பிலை,
~ விநாயகருக்கு அருகம் புல்,
~ பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.
2. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்
விளக்கம்
•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்
பயன்பாடு
பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.
அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?
அர்க்கயம் - கைகளுக்கு, பாத்யம் - பாதங்களுக்கு, ஆசமனீயம் - இது ஆசமனம், ஸ்நானீயம் - திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!
இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!
• நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!
மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.
3.பஞ்சமுகம்...... இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.
வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.
முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.
அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறோம்...!!!!
+++++++++++++++++++++++++++++
பஞ்சபாத்திரம் 

'A kind of vessel of five plates collectively or made of five metals, used by advanced religionists, to hold water fr purification'  
இதனை “பஞ்சலோக பாத்திரம்“ எனத் தமிழில் சொல்லப்பட்டிருக்கிறது. வின்ஸ்லோ அகராதி மிகப் பழமையானது. அன்றிருந்த பொியோர்களின் ஆலோசனை நிச்சயமாக இதில் அடங்கியிருக்கும். எனவே இதில் ஓரளவாவது பொருள் இருக்கும் என நம்புகிறேன். நாட்டுவழக்கில் ”ஐம்பொன்” என்றும் ஒரு வார்த்தையுண்டு. இது தவிர தெய்வ விக்கிரகங்கள் பஞ்சலோகத்தில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். 
எனினும் பஞ்ச பத்ர பாத்திரம் என்பதிலும் நன்மையான பொருள் கூறப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும். எனினும் அதில் விஷ்ணு - துளசி, சிவன் - வில்வம், அறுகு - விநாயகர், வேம்பு - அம்பாள், அத்தி - பிரமா  எனக்கூறப்பட்டுள்ளது. சிவனின் அடுத்த மிக முக்கியமான முருகன் இடம் பெறவில்லை. சிவரகசியத்தில் ஸ்கந்த புராணமே முக்கிய பகுதி எனவும் கூறப்படுகிறது. எனவே குறிப்பிட்ட பத்திரங்களில் இவைதான் என்று நிர்ணயம் செய்வது சாியாகத் தொியவில்லை. எனவே பத்ரங்களைப் பொறுத்தளவில் சிறிது தளர்வு செய்ய வேண்டும்.  
அகராதியில் கூறப்பட்டது தவறு என நிரூபணமானால் அதை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அது எல்லோராலும் சந்தேக நிவர்த்திக்காகப் பயன்படுத்தும் ஒன்றாகும். 
எது எவ்வாறாயிருப்பினும் ஒரு இந்துவாக இருப்பவருக்கு பஞ்சபாத்திரம் மிக முக்கியமானதாகும். ஆதலால் இது பற்றிய தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு முன்னிடம் வழங்கப்படவே வேண்டும்.

Thursday, 21 July 2016

கிழமையும் சாப்பாடும்

எந்த உணவை எந்த கிழமைகளில் சாப்பிடுவது உகந்தது
உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?
1. ஞாயிறு — சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.
2. திங்கள் — சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,மோர்.
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பாம்.இட்லி.
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.
3. செவ்வாய் — செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,தர்பூசணி ஜூஸ்,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.மிளகாய் துவயல்.
4. புதன் — புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் தொக்கு, முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.
5. வியாழன் — குரு
சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.
6. வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.
7. சனி — சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.
இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும்அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமேஅந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாகஆன்மீகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி
நமக்கு ஒரு அழகான, நலமான வாழ்வியல் முறையை அமைத்து கொடுத்துள்ளார்கள்.

கன்னிகாதானம்


கன்னிகாதானம்:-

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி. 'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மமஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் உணர்த்துகிறது.

Wednesday, 20 July 2016

வெட்டிவேர் விசிறி

வெட்டிவேர்
Image result for வெட்டிவேர் விசிறிImage result for வெட்டிவேர் விசிறி
குளிர்பானங்கள், இளநீர், மோர், பழங்கள், போன்றவை கோடையைச் சமாளிக்க உதவுகின்றன. இவற்றையெல்லாம்விட கோடைத் தொல்லைகளை வெல்ல மிகவும் உதவுவது வெட்டிவேர் ஆகும். வெட்டிவேரானது வெம்மையை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவது மட்டுமின்றி, நறுமணத்தையும் தருகிறது. மேலும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையுடையது.
 வெட்டிவேரில் மணம், குணம் தரும் ஒரு வகையான வேதிப்பொருள் அடங்கியுள்ளது. இதிலிருந்து மணம் தரும் ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் இடம் பெறுகிறது.

 வெட்டிவேரைத் துண்டுகளாக வெட்டிக் குடிநீரிலிட்டுப் பயன்படுத்தலாம் பொடியாகவோ, கஷாயமாகவோ, எண்ணெய்யாகவோ பயன்படுத்தலாம். விசிறி, பாய், திரை தயாரித்து பயன்படுத்தலாம். வேர்களை நீரிலிட்டு அல்லது சந்தனத்துடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம்.

 வெட்டிவேர் பல்வேறு சிறப்புக் குணங்களைத் தன்னகத்தே கொண்டது. குளிரூட்டி, பசியூட்டி, சிறுநீர்ப்பெருக்கி போன்ற தன்மைகளைக் கொண்டது. உடல் வெம்மையை நீக்கி குளிர்ச்சியூட்டுகிறது. வேர்க்குரு, வேனல்கட்டிகளைக் குணப்படுத்தும். உடல்சூடு, கண் எரிச்சல், தலைவலி இவற்றைக் குணப்படுத்தும். கோடையில் ஏற்படும் நீர்ச்சுருக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும்.

 • வெட்டிவேரை நீரிலிட்டு காய்ச்சி நீரை வடிகட்டி அரை கப் வீதம் மூன்று வேளை அருந்த வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு தீரும்.
 • வேரை அரைத்து உடல் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில் தேய்க்க அரிப்பு, எரிச்சல் மாறும்.
 • சந்தனப்பொடியுடன், வெட்டிவேர்ப்பொடி கலந்து உடலில் பூசிக் குளிக்க உடல் மணம் வீசும். தோல் நோய்கள் ஏற்படாது.
 • வெட்டிவேர்ப்பொடியுடன், சந்தனப்பொடி கலந்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் பொடியை இளநீரில் கலந்து வேர்க்குரு. வேனல்கட்டி மேல் பூசி அரை மணிநேரம் ஊறிய பின் குளிக்க வேர்க்குரு, வேனல்கட்டி மாறும்.
 • இரவில் வெட்டிவேரைத் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வடிகட்டி அரை கப் வீதம் மூன்று வேளை அருந்த உடல் சூடு தணியும்.
 • வெட்டிவேரை மோர் அல்லது பாலில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட கோடைத் தொல்லைகளான நா வறட்சி, அதிக தாகம் போன்றவை தீரும்.
 • வெட்டிவேர்ப் பொடியை பாலில் கலந்து இனிப்பு சேர்த்துச் சாப்பிட கண் சூடு, தொண்டை வலி, நா வறட்சி, அதிக தாகம் தீரும்.
 • மண்பானை நீரில் சிறிதளவு வெட்டிவேரைப் போட்டு வைத்துக் குடித்தால் வெம்மை தீரும். தேக அனல், நீர்ச்சுருக்கு மாறும்.
 • வெட்டிவேர்ப் பொடியை, நீரில் கலந்து சாப்பிட அஜீரணம் தீரும்.
 • பொடியைத் தேனில் குழைத்து உண்ண வயிற்றுப்பிணிகள் தீரும்.
 • வெட்டிவேர் விசிறி குளிர்ச்சியை ஊட்டும்.
 • வெட்டிவேர் தட்டியை வீடுகளில் கட்டி நீரால் நனைக்க ஏர்கண்டிஷன், ஏர்கூலர்போல குளிர்ச்சியைத் தரும்.
 • மின்விசிறியின் கீழ் வெட்டிவேர்ப் பாய் அல்லது வெட்டிவேர் தட்டியை நனைத்து வைத்தால் அரை முழுவதும் குளிர்ச்சி பெறும்.
 • வெட்டிவேர், சந்தனம், மஞ்சள் இம்மூன்றையும் சேர்த்து அரைத்து கொப்புளம், கட்டி மேல் தடவி வர அவை ஆறிவிடும்.
++++++++++++++++++++++++++++++++++++++
விசிறிகளின் மருத்துவப்பயன்கள்.
1)தென்னை,பனை,ஈச்ச மட்டை விசிறிகளினால்:வாதம், பித்தம், கபம் இவைகளினால் ஏற்படும்பிணிகளும் சுவையின்மையும் நீங்கும்
2)வெட்டிவேர் விசிறியினால்: தாகம்,உடல் எரிச்சல்,பைத்தியம் இவை நீங்கும்.மன ஊக்கம் ஏற்படும்.
3)மயில்தோகை விசிறியினால்:வாத பித்த நோய்கள், சன்னி, பாதம். வயிற்றுவலி இவை தீரும்.
4)வெண்சாமரத்தினால் விசிறியினால்: வெப்பம், மயக்கம், மூர்ச்சை, வியர்வை, ஆயாசம் இவை தீரும். புணர்ச்சியில் இச்சையும், செல்வமும் பெருகும்.

Sunday, 17 July 2016

தனிஷ்டா பஞ்சமி

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன?

இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேன்டும்.!!!

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்

 அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
 ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
 கார்த்திகை, உத்திரமஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
மிருகசீருஷம், சித்திரை புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிறக்கும் போது நட்சத்திரத்தையும்இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்புஎன்று வழங்கப்படுகின்றன.
அது என்ன அடைப்பு?  அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.
  வாழ்க வளமுடன்

Saturday, 16 July 2016

ஆடி

ஆடி 1
*******
சரவித்தை என்ற சுவாசக்
கலையில் இந்நாள் மிகவும் முக்கியமான நாள்.
நாள் உதயம் என்பது இந்திய மரபில் சூரிய
உதயத்தைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது,
இரவு 12 மணி என்பதை அல்ல.
இந்நாளில்
உங்கள் சுவாசத்தை சூரியகலையான வலது
கலையில் தொடங்கினால் வருடத்தில் எல்லா
நாட்களும் சரமாகிய சுவாசம் சரியாக ஓடி
வாழ்க்கையில் எல்லா நலங்களையும் தரும்.
இந்நாளில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து,
உங்கள் சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றது
என்பதை கவனியுங்கள். ஒரு வேலை வலது
பக்கம் ஓடவில்லை என்றால், இடது பக்கமாக
திரும்பி படுத்து, இடது கையை மடித்து
தலைக்கு கீழே வைத்து, கால்களை நீட்டி
வலது கையை வலது தொடை மீது
வைத்துக்கொண்டு உங்கள் சுவாசத்தை
கவனித்தால், தானாகவே சுவாசம் வலது
கலைக்கு மாறிகொள்ளும் அல்லது நிமிர்ந்து
உட்கார்ந்து இடது தொடை மீது வலது
காலைப் போட்டு உட்கார்ந்தால் போதுமானது.
இந்நாளில் உங்கள் சுவாசத்தை காலை 6
முதல் மாலை 6 வரை வலதுகலையில்
ஓடசெய்தால் மிக்க பலன் தரும்(இடது
மூக்கில் சுத்தமான பஞ்சை வைத்து
அடைத்துக் கொள்ள வேண்டும்).
அப்படி
முடியாத பட்சத்தில் சுவாசக்கலையை சூரிய
கலையான வலதில் தொடங்கினால் நல்லது.
இந்த ஒரு நாள் இதை கடைபிடித்தால்
வருடத்தில் எல்லா நாட்களும் பல நன்மை
உண்டு என்பது நிச்சயம். இதை படிப்பதோடு
விட்டுவிடாமல் செயலிலும்,செயலோடு
விட்டுவிடாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து
அனைவரும் நன்மை அடைய உதவுங்கள்.
சரவித்தை தெரிந்தவர்கள் யாரும் இதை
வெளியே சொல்வது இல்லை.
சரகலை பயிற்சி- பூதசரம்
****************************
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் ஐந்தின்
பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின்
பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின்
வகைசெயப் பாலனும் ஆமே.
இந்த அண்ட பிண்டமென அனைத்தும் உருவாக
நமசிவய என்ற ஐந்தெழுத்தாகிய
பஞ்சபூதங்களே காரணமாகும். இந்த ஐந்தின்
பெருமையை பற்றி திருமூலர், சிவவாக்கியர்,
காகபுஜண்டர், வள்ளலார்.,., என அனைவருமே
எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை
உணர்ந்த வண்ணம் என்பது அவரவர்கள்
சுவாசத்தை கொண்டுதானாகும். அண்டத்தில்
உள்ளதெள்ளாம் பிண்டத்தில் என்றும்,
அண்டமாகிய இப்பிரபஞ்சத்தை விட
பிண்டமாகிய இவ்வுடலே விசாலமானது
என்றனர் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட
உடலை ஆராய்ச்சி கூடமாகவும் சுவாசத்தை
கருவியாக கொண்டே அனைத்தையும்
அறிந்தனர்.
"ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுத் தேவரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்ற யறியச் சொன்னார்
முனியோர்கள் இருடியரிப்படியே சொன்னார்கள்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்து பேரான
பூரணத்தைத் நினைவாய்க் காரு வாச்சப்பா
பூரணத்தைக் காக்கும் பேர்கள் வாசிநடு
மையத்துள் வாழ்வார் தானே"
அதாவது சுவாசத்தை பற்றிய சித்தர்கள்
பாடல்கள் கணக்கில்லாமல் இருந்தாலும்,
சித்தர்களுக்கு முதன்மையானவரான அகத்தியர்
சுவாசத்தை தெய்வம் என்று கொண்டே
பதிஎண் சித்தர்கள் முதல் அயன், மால், ஈசன்,
தேவர்கள் என அனைவரும் பயன்பெற்றனர் என
தனது ஞானத்தில் கூறியுள்ளார்.
நூலாகிய
சுவாசத்தை பிடித்தால் சேலையாகிய
இறைவனை பிடிக்கலாம்.
தன்னையறிய
தலைவனையறியும் முறையாகும்.
மேலும் இந்த உடலை யந்திரம் எனவும்,
சுவாசத்தை மந்திரம் எனவும், இவற்றை
இயக்கும் விதம் தந்திரம் எனவும் கூறலாம்.
காரணம் மகா மேரு பீடம் என்று கூறப்படும்
ஸ்ரீ சக்கரத்தின் அடுக்கு யந்திரம் என்பது நம்
முதுகுதண்டையே குறிக்கும்.
அதேபோல்
எண்ணற்ற யந்திரங்கள் நம் உடலின் ஒரு
குறிப்பிட்ட பாகங்களையோ அல்லது முக்கிய
இடங்களையோ அல்லது தலை மற்றும்
மூளையின் சிறு பகுதியோ அல்லது
முழுவதுமான வடிவத்தை கொண்டே
வடிவமைக்கப்பட்டது. இதில் மந்திரங்களான
பீஜங்களை சில குறிப்பிட்ட தந்திரமுறைகளை
கொண்டு உட்சரிக்கும் போது சுவாமாகிய
காற்று வெட்டப்பட்டு துள்ளியமான ஒலிஒளி
அதிர்வுகள் உள்ளும் வெளியிலும் பரவி
யந்திரம் சக்தி பெருகின்றது. எப்பொழுது
எல்லாம் ஒருவன் அந்த யந்திரத்திற்கு
பக்கத்தில் செல்கிறானோ, அப்போதெல்லாம்
அவன் உடலில் உள்ள அந்த யந்திர வடிவ
பகுதி சக்தி பெரும். சரி இதில் சுவாசத்திற்கும்
பஞ்சபூதத்திற்கும் என்ன சம்பந்தம்??
நாம் சுவாசிக்கும் காற்று பஞ்சபூத
தன்மையை கொண்டே செயல்படுகின்றது.
அதாவது நம் உடலிலும் மனதிலும் ஏற்படும்
மாற்றத்திற்கு இப்பஞ்சபூத சரமே காரணம்.
பூதசரத்தில் எந்த பூதத்தின் சரம் ஓடுகின்றது
என கண்டுபிடிப்பதில் பல வழிகள் உண்டு.
அவைகளில் சுவையை கொண்டு அறிவது,
கண்ணாடியில் சுவாசத்தை ஊதி, அதில்
தெரியும் வடிவத்தை கொண்டு அறிவது,
நிறத்தை கொண்டு அறிவது என பலவழிகள்
உண்டு.
" பாராப்பா பிருதிவியிற் கவிழ்ந்தேயோடும்
பரிவான அப்புதனில் வலத்தே யோடும்
சேரப்பா தேய்வுதனில் இடத்தே யோடும்
திறமான வாயுதனில் நேரா யோடும் ஒரப்பா
அந்தரத்தில் மேலே யோடும் ஒன்றேனும்
குறைவுப்படாது உற்றுநோக்கி ஆரப்பா
இந்நூலைப் பார்பார் கேட்பார் அறிவான
மூமின்கட்கருள் செய்தோமே".
இதில் மிக சுலபமாக சரத்தை கண்டுபிடிக்க
மேற்கண்ட பாடலே சிறந்தது. அதாவது
மூச்சானது கீழ்நோக்கி(பூமியை நோக்கி)
கவிழ்ந்து ஓடினால் அச்சரமானது பிருதிவி
(நிலம்) சரமாகும். அதுபோல் மூச்சானது
இடகலையில் அல்லது பிங்கலையில் என
எப்படி நடந்தாலும், மூச்சானது சாய்ந்து
இடது பக்கமாக ஓடினால் அப்பு(நீர்) சரமாகும்.
அதே போல் வலது பக்கமாக சாய்ந்து
ஓடினால் தேயு(தீ) சரமாகும். மூச்சானது
ஒடிந்து நமக்கு முன்னால் நேராக ஓடினால்
வாயு(காற்று) சரமாகும். வெளிவரும்
மூச்சானது நாசி வழி வடிந்து நமக்கு
முன்பாக மேல்நோக்கி சென்றாலும்,
உள்ளுக்குள்ளேயே ஓடினாலும் ஆகாய
சரமாகும். இப்படி நம் மூச்சானது எந்த
பூதத்தை சார்ந்து ஓடுகின்றது என்பதை
சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
நாம் அசையா வேளையில் பிருதிவியும்,
அசையும் வேளையில் அப்புவும், கஷ்ட
வேளையில் தீயும், நம்மில் ஏதேனும் சலிப்பு
ஏற்பட்டு அதனால் ஏற்படும் துறவு
வேளையில் காற்று சரமோடும். அதிக நேர
தியானம், வாசி மற்றும் பூசை வேளையில்
ஆகாய சரமோடும்.
மேலும் பூர்வபட்ச வியாழனில் பூமி சரமும்,
அமரபட்ச வியாழனில் நெருப்பும், வெள்ளி
நீரும், புதன் காற்றும், சனிக்கிழமை ஆகாய
சரமும் மேற்கண்ட நாட்களில் முதலில் ஓட
அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் ஞாயிறு
நீர் சரமும், திங்கள், செவ்வாய், வியாழன்
போன்ற நாட்களில் தீ சரமும், புதன் பூமியும்,
வெள்ளி காற்றும், சனி ஆகாய சார்ந்த சரம்
நடப்பது மிக்க நல்லது.
பொதுவாக ஒருவருக்கு மண் மற்றும்
நீருக்குண்டான சரம் நடந்தால், அவர் சத்துவ
குணமுடையவராவார். மேலும் ஒருவருக்கு
கோபம், அகங்காரம், ஆணவம், காமம் போன்ற
எண்ணங்கள் தீ சரம் நடக்கும்போது
உண்டாகும். எனவே அதை கவனித்து பக்தியில்
மனதை செலுத்தினால் நல்லது. காற்று சரம்
நடந்தால் அவன் ஞானியை நெருங்கியவன்.
ஆகாய சரம் நடந்தால் அவன் கடவுளை
நெருங்கியவன். தீ சரம் பக்தியில்
தீவிரமாயிருப்பவனுக்கும், நீர் சரம் தானதர்ம
செய்பவனுக்கும், மண் சரம் ஓடினால் அவன்
உபதேசம் செய்பவனாகவும் இருப்பான்
மேலும் காலையில் படுக்கையிலிருந்து
எழும்போது கொட்டாவி விடாமல் மூச்சை
உள்ளிழுத்து கொண்டு எழுந்திருந்தல் மிக்க
நலமாய் அமையும்.
சூரியகலையில்
மண்சரமோ, நீர்சரமோ ஓடும்போது
அந்நிலையில் எக்காரியம் ஆகவேண்டியிருப்ப
ினும் அக்காரியத்தினை செயலில் நோக்க
விரைவில் அது எளிதாக முடியும். மண்ணும்
நீரும் கலந்தேயிருப்பது போல உடலில்
மாமிசமும் உதிரமும் கலந்தேயுள்ளன.
ஆகாயமும் காற்றும் கலந்தேயிருப்பது போல
சரமாகிய மூச்சு காற்று ஆகாய பந்தத்தில்
கலந்தேயுள்ளது. அக்கினி மட்டும்
பூமியிலும், பிரபஞ்சத்திலும், உடலிலும்
அனைத்திலும் பொது நிலையாய் மத்தியில்
உள்ளது.
இதுவரை சரசாஸ்திரம் ஓரளவு
நிறைவடைகின்றது. இதில் இன்னும் பழகப்
பழகப் இப்பூத சரமானது எப்பூத சரத்தில்
போய் முடிகின்றது என்பதை கண்டு இந்த
பஞ்சபூத சரத்தையும் இடகலையில் 25
ஆகவும், பிங்கலையில் 25 ஆகவும்
பிரிக்கலாம். அதாவது நமது மூச்சு
பிருதவியினை பூமிசரமூச்சில் தொடங்கி
எப்பூத சரத்தில் முடிகின்றது என காண
வேண்டும். காண முடியும். இந்த அளவு
துள்ளியமாக பார்க்கும் முறையில் நம்மற்றில்
உலகின் ஆதிஅந்த செயலின்
முக்காலங்களையும் நன்கு அறிந்துணர
முடியும். மேலும் இடது 25யும், வலது
25யும் மற்றும் சுழுமுனையாகிய 1யும்
சேர்ந்த கூட்டுதொகையே 51 அட்சரமாகிய
சிதம்பர சக்கரமாகும். இதை விளக்க விளங்கி
கொள்ள தெரிந்தவன் பரத்தை தெரிந்தவன்
ஆவான்.
சிதம்பர சக்கரத்தை தெரிந்து
கொள்வதற்குமுன், நமசிவய மந்திரத்தில் ந-
நிலமாகவும், ம- நீராகவும், சி-
நெருப்பாகவும், வ- காற்றாகவும், ய-
ஆகாயமாகவும் உள்ளன. இவற்றின் நிறம்,
சுவை, வடிவம், தூரம் ஆகியன
ந-நிலம்-பொன்-சதுரம்-தித்திப்பு-12
அங்குலம்,
ம-நீர்-வெண்மை-பிறை வடிவம்-துவர்ப்பு-16
அங்குலம்,
சி-தீ-சிகப்பு-முக்கோணம்-உவர்ப்பு-8
அங்குலம்,
வ-காற்று-கருப்பு-அறுகோணம்-புளிப்பு-4
அங்குலம்,
ஆகாயம்-பச்சை-வட்டம்-கார்ப்பு-1
அங்குலமாகும்.
இவற்றில் நிலத் தத்துவத்தில் நிலத்தில் நிலம்,
நிலத்தில் நீர், நிலத்தில் தீ, நிலத்தில் காற்று,
நிலத்தில் ஆகாயம் என ஐந்து பிரிவுகளாக
உள்ளும் வெளியும் இயங்கும். இதேபோல்
நீர்,தீ, காற்று மற்றும் ஆகாயம் என மொத்தம்
25 பிரிவுகளாக இயங்கும் விதத்தை 25
கட்டத்திற்குள் வைத்து ஒட்டு மொத்த பிரபஞ்ச
இயக்கத்தை குறிப்பிடுவதே சிதம்பர
சக்கரமாகும்.

ஆடி மாதத்தின் சிறப்பு :

ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள். 

மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.

தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது. 

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.இந்த ஆடி நாளில் பைரவர் அருளால் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்க.வாழ்க்கை பசுமையாகட்டும்!வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்!!

ஆடி மாதம் தட்சிணாயன புண்ணிய காலம். இந்த காலத்தில்தான், இந்த மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! 

மேலும், கோ பத்ம விரதம், நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல்... என  அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு. 
ஆடிச் செவ்வாய் விரதம்!

    பொதுவாகவே பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது விசேஷம். குறிப்பாக, ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிகள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோல் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. 

  கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டித்து பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்து அளிப்பார்கள். 


  ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்