Wednesday, 24 August 2016

விரதம் நோன்பு

மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது
தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி
மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக
அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும்
விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை
முழுமையாக உணரமுடியும்.

விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும்.

ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது எடுத்துக்கொண்ட செயலை
எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம்
கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும். இறைவனை நினைத்து
உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.

நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான
முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு
சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும்
ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல
செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள்
உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

"நீ பேசாதபோது இறைவன் உன்னோடு பேசுவார்.
+++++++++++++++++++++++++++++++++++

விரதங்களும் பலன்களும்/விரதத்தின் போது பலகாரங்கள் சாப்பிடலாமா?

விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும்.

“ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.

இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.

விரதங்களும் பலன்களும்

விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவரின் பரிபூர அன்பைப் பெறலாம்.

2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.

4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.

விரதம் விளக்கம்

விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம்,விரதம் இருக்கும் முறைகள்மேலும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இன்று விரதம் என்ற பெயரில் பல முறைகளை பின்பற்றுகின்றனர்.விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன்.

ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.

இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம்.

++++++++++++++++++++++++++++
உறுப்புக்களின்  செயலை #தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி ?..

* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை
கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின்
அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என
கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான்
துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை
கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.

பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும்
இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல்
வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும்
புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக
விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள்
சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு
ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான்
செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த
சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில்
அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - காற்று 
தொடு உணர்வு - மண் 

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம்
வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம்
அடையும். 

காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின்
தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால்
செயற்கையாக நிறுத்த முடியாது.

உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி?

சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. 

நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை
கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம.

நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு
செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம்
பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன்
உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை
கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில்
அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக
குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை
பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும்
சாஸ்திரத்தில் உண்டு.

மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது
தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால்
உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை
விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள்
நமக்கு நன்மை செய்கின்றன.

விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ
ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற
வைராக்கியம்.. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான்
என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள்
ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை
காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும்
குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம். இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி,
வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை
சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது.
ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்
+++++++++++++++++++++++++++++++
விரதம் இருப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்:

நாம் ஆன்மீகம் மற்றும் மூட நம்பிக்கை என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ஆகும். நமது முன்னோர்கள் மறைமுகமாகவும், தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்மிடம் கட்டாயப்படுத்தித் திணித்த சில விஷயங்கள் தான், கால போக்கில் நம்முன் கண்மூடித்தனமான பக்தியாகவும், மூட நம்பிக்கையாகவும் மருவி நிற்கின்றன.
இந்த விஷயங்களில் நம்மில் சிலர் மட்டுமே, அதிலும் பெண்கள் மட்டுமே பெரும்பாலும் கடைப்பிடித்து வரும் விரதம் என்பது மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. விரதம் பல வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு 2 வேளை உணவு, வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது என்று விரதங்கள் உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவு செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. ஆனால் இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலாக மாறாமல் தடுக்கப்பட்டு அப்படியே தேங்கி விடுகிறது.

1 உடல்நிலை மாற்றம்.
விரதம் இருப்பதனால் உங்களது உடல் மற்றும் மன நிலையில் அமைதி ஏற்படும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

2 நோய் எதிர்ப்பு.
உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதனால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

3 உடல் எடை குறைவு.
விரதம் இருப்பதனால் ஏற்படும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில் உங்களது உடல் எடை குறைய இது பெருமளவில் உதவும்.

4 மன நிலை மேன்மையடையும்.
நீங்கள் விரதம் இருப்பதனால் உங்களது ஞாபக திறன் அதிகரிக்கிறது, ஒருமுகத்தோடு வேளைகளில் ஈடுப்பட விரதம் இருப்பது சிறந்த முறையில் பயனளிக்கும்ணவு இடைவேளை தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.

5 உணவு இடைவேளை.
தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.

6 வாரம் ஒருமுறை.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது.

7 மூக்கு முட்ட உண்பது தவறு.
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டு பழகிவிட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அது தவறு.


8 விரதம் இருக்க வேண்டிய முறை.
விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

9 புத்துணர்ச்சி.
வாரமோ, மாதமோ ஒரு நாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடைய செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்.

10 குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதமும் இருக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இறைவனை ஜோதியாக வணங்கி, போற்றி யுள்ளனர் தமிழர்கள். இவ்வழிபாட்டை, சங்ககால இலக்கியங்கள், 'கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிட்டுள்ளன. விளக்கு வழிபாடு செய்த நிகழ்வுகள், அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன. கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.

கார்த்திகை தீபத்தன்று மட்டுமல்ல, எல்லா நாட்களிலுமே விளக்கேற்றுவது தமிழர் மரபு. தினமும், காலை, மாலை விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். சூரியோதயத்திற்கு முன், பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை, 4:30 - 6:00 மணி) விளக்கேற்றினால், பெரும் புண்ணியம் உண்டாகும்; முன்வினைப் பாவம் விலகும். மாலையில் தீபமேற்றினால், திருமணம் மற்றும் கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். பொதுவாக மாலை, 6:00 மணிக்கு தான் நாம் விளக்கேற்றுகிறோம். இதற்கு பதில், மாலை, 4:30 - 6:00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் விளக்கேற்றினால், சிவபெருமானும், நரசிம்மரும் நமக்கு அருளுவர். காரணம், அவர்களை வணங்க ஏற்ற நேரம் இவை!
கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தர் பாடியுள்ளார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்... என்று அவர் பாடுவதில் இருந்து, இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.

தீபஜோதி என்பது அக்னி தத்துவம்; அக்னியின் சொரூபமாக, ஈசனின் நெற்றிக் கண் அமைந்துள்ளது. அதில் எழுவது சாதாரண தீ அல்ல; அது, அநியாயக்காரர்களைக் கொல்லும்; மற்றவர்களுக்கு ஞான ஜோதியாய் தெரியும்.
ஆசையைத் தூண்டும் மன்மதனை, சிவபெருமான் எரித்தது ஞானத்தீயால் தான்! ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, பிறவிகளும் அதிகரிக்கும். அந்த ஆசைத்தீ அடங்க, சிவனின் நெற்றிக்கண்ணை நாம் தரிசிக்க வேண்டும். இதன்மூலம் பிறப்பற்ற நிலையை அடைந்து, நித்ய ஆனந்தத்தை அடையலாம்.

திருக்கார்த்திகை திருநாளில், திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம், சிவாம்சம் கொண்டதே! யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் சிவன். அவர், பூலோக மக்கள் மீது கொண்ட கருணையால், தன்னை எளிமைப்படுத்தி, அருள்புரிவதற்காக நெருப்பு வடிவில் காட்சி தருகிறார்.
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டபோது, அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை சரவணப் பொய்கையில் சிறுகுழந்தையாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே, நம் வீட்டு சிறு அகல் விளக்குகளில் குட்டிக் குழந்தை முருகனாக ஒளி வீசுகிறது.

வாசலில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை ஏற்ற வேண்டும். விளக்கு இல்லாவிட்டால், குடியிருக்கும் வீடு இருண்டு விடுவதைப் போல, மனம் என்னும் வீட்டில் ஒளி இல்லாவிட்டால், அநியாயங்களே வெளிப்படும்.
கணவர் மற்றும் பிள்ளைகள் தீய பழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் திருந்தி, நற்குணங்கள் பெற, பெண்கள் கார்த்திகை விரதம் இருப்பர். ஓர் ஆண்டு, மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கார்த்திகை திருநாளன்று தீபமேற்றி, பிரகாசமான வாழ்வைப் பெறுவோம்.

Saturday, 30 July 2016

அர்த்த சாஸ்திரம்

அர்த்த சாஸ்திரம்

👍1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

👍2 ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

👍3 ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

👍4 ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

👍5 நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

👍6 உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

👍7 கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

👍8 காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

👍9 பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

👍10 சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

👍11 சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
👍கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍12 விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍13 இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍14 கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

👍15 அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

👍16 யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

👍17 எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

👍18 அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

👍19 சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

👍20 வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

👍21 அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

👍22 எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

👍23 மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

👍24 பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

👍25 கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

👍26 வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

👍27 பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

👍28 வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

👍29 கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

வராஹி

கோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்

வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு
பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்

இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.

வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள்

வராஹம் என்றால் என்ன? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான் . என்ன உதவி தெரியுமா ??
பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

சரி அங்கே உந்துதல் , தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி , நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும் ? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்??என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடைய குண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி

இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..
அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்,
ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும் ஆயுதங்களும்.
சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் ? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , எதிரிகள் குறைவார்கள்{அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது} ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது

வராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.

இப்படி வராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.

ஆனால் வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள்.

வராஹி காயத்திரி

ஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய
தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத்

மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
🌺🌺🌺🌺🌺🌺🌺
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்*
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
🌹🌹🌹🌹🌹🌹🌹
வராஹி மூல மந்திரம்
(1)
ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

(2)
ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸத :
🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க வளமுடன்


Wednesday, 27 July 2016

தாடி

வசீகரம்

 நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் 'சொல்லுடா..' என்றான்.

    'எங்கடா இருக்க... இண்டர்வியூ போனியே என்னாச்சு..' என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

    'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்றான் அன்வர்.

    'ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்... நான் அப்பறமா கால் பண்றேன்' என்று ரமேஷ் கூறியதும், 'தேங்க்யூடா..' என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.

    ஹெச்.ஆர். அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.

    'மேய் ஐ கம் இன் சார்...'

    'எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்...'

    'தேங்க்யூ சார்...'

    'குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க... இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..' என்றார் ஹெச்.ஆர்.

    'சரிங்க சார்...' என்றான் அன்வர்.

    'உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க...உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..'

    'தேங்க்யூ சார்...'

    'ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி தாடி வைக்கக் கூடாது.  தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்...' என்றார் ஹெச்.ஆர்.

    'சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்...' என்றான் அன்வர்.

    'இது கம்பெனி ரூல்ஸ்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது...'

    'ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்... தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா..? தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா..? ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..?'

    'ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்...?' என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,

    'தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..' என்று பதிலளித்தான் அன்வர்.
    'நன்மையா..? தாடி வைக்கிறதுனாலையா..? சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..' என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.

    'இல்லை சார்.. அப்படி இல்லை..'

    'தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..?'
 
    'இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார்.  விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது.  அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது...'

    'வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..?'

    'நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கண்ணமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது...  தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUS என்ற சுரப்பி சுரக்கிறது.  இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது.  தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.  பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.  ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும்.  தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது.  முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது.  இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார்.  அதனால்தான் முஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...'

    'வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ்  இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே...?'

    'அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்..  உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு..Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள்தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி  மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா..? ஏதும் சாதிக்கலையா..? தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..'

    'எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது.  தேங்ஸ் அன்வர்.  உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும்தான் எங்க கம்பெனிக்குத் தேவை.  வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு நாள்ல வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..'

    'தேங்க் யூ சார்..' என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.

    இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.இரண்டு நாட்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது.

-ill,M. ஷாஜஹான்.

Monday, 25 July 2016

மா


மா, மாம்பட்டை,  மாங்கொட்டை, மாம்பழம், மாங்காய், மாம்பூ, கொழுந்து இலை,  மாவிலை, மாமரம்,

மாவிலை:-

மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

கிருமிநாசினியான மாவிலை

கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

Scientific classification:-
-----------------------
Kingdom: Plantae
(unranked): Angiosperms
(unranked): Eudicots
(unranked): Rosids
Order: Sapindales
Family: Anacardiaceae
Genus: Mangifera
Species: M. indica

Binomial name:-
----------------
Mangifera indica
L.

Synonyms:-

-------------
Mangifera austro-yunnanensis Hu[1]

மாம்பூவும், பட்டையும்

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

பித்த வெடிப்பு குணமாகும்

பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மாங்காய்

மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்

மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம். கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

உதிரப்போக்கு கட்டுப்படுத்தும்

மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

Saturday, 23 July 2016

பஞ்ச பாத்திரம்

பஞ்ச பாத்திரம்

பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை இங்கே பதிவு சொல்கிறேன்
1.இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.
அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.
துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி
ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.
இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'.
இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.
இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.
இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
~ சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,
~ திருமாலுக்கு உகந்தது துளசி,
~ அம்மனுக்கு வேப்பிலை,
~ விநாயகருக்கு அருகம் புல்,
~ பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.
2. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்
விளக்கம்
•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்
பயன்பாடு
பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.
அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?
அர்க்கயம் - கைகளுக்கு, பாத்யம் - பாதங்களுக்கு, ஆசமனீயம் - இது ஆசமனம், ஸ்நானீயம் - திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!
இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!
• நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!
மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.
3.பஞ்சமுகம்...... இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.
வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.
முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.
அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறோம்...!!!!
+++++++++++++++++++++++++++++
பஞ்சபாத்திரம் 

'A kind of vessel of five plates collectively or made of five metals, used by advanced religionists, to hold water fr purification'  
இதனை “பஞ்சலோக பாத்திரம்“ எனத் தமிழில் சொல்லப்பட்டிருக்கிறது. வின்ஸ்லோ அகராதி மிகப் பழமையானது. அன்றிருந்த பொியோர்களின் ஆலோசனை நிச்சயமாக இதில் அடங்கியிருக்கும். எனவே இதில் ஓரளவாவது பொருள் இருக்கும் என நம்புகிறேன். நாட்டுவழக்கில் ”ஐம்பொன்” என்றும் ஒரு வார்த்தையுண்டு. இது தவிர தெய்வ விக்கிரகங்கள் பஞ்சலோகத்தில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். 
எனினும் பஞ்ச பத்ர பாத்திரம் என்பதிலும் நன்மையான பொருள் கூறப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும். எனினும் அதில் விஷ்ணு - துளசி, சிவன் - வில்வம், அறுகு - விநாயகர், வேம்பு - அம்பாள், அத்தி - பிரமா  எனக்கூறப்பட்டுள்ளது. சிவனின் அடுத்த மிக முக்கியமான முருகன் இடம் பெறவில்லை. சிவரகசியத்தில் ஸ்கந்த புராணமே முக்கிய பகுதி எனவும் கூறப்படுகிறது. எனவே குறிப்பிட்ட பத்திரங்களில் இவைதான் என்று நிர்ணயம் செய்வது சாியாகத் தொியவில்லை. எனவே பத்ரங்களைப் பொறுத்தளவில் சிறிது தளர்வு செய்ய வேண்டும்.  
அகராதியில் கூறப்பட்டது தவறு என நிரூபணமானால் அதை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அது எல்லோராலும் சந்தேக நிவர்த்திக்காகப் பயன்படுத்தும் ஒன்றாகும். 
எது எவ்வாறாயிருப்பினும் ஒரு இந்துவாக இருப்பவருக்கு பஞ்சபாத்திரம் மிக முக்கியமானதாகும். ஆதலால் இது பற்றிய தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு முன்னிடம் வழங்கப்படவே வேண்டும்.

Thursday, 21 July 2016

கிழமையும் சாப்பாடும்

எந்த உணவை எந்த கிழமைகளில் சாப்பிடுவது உகந்தது
உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?
1. ஞாயிறு — சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.
2. திங்கள் — சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,மோர்.
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பாம்.இட்லி.
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.
3. செவ்வாய் — செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,தர்பூசணி ஜூஸ்,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.மிளகாய் துவயல்.
4. புதன் — புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் தொக்கு, முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.
5. வியாழன் — குரு
சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.
6. வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.
7. சனி — சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.
இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும்அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமேஅந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாகஆன்மீகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி
நமக்கு ஒரு அழகான, நலமான வாழ்வியல் முறையை அமைத்து கொடுத்துள்ளார்கள்.